இஸ்லாமிய பார்வையில் பெண்கள்

  • 11

பெண்கள் உலகத்தில் இல்லை எனில் மனித இனமே அழிந்துவிடும். மனித இனம் பெருகி வருவதற்கு வழியில்லாது போய்விடும். பெண்களே ஆண்களை வளர்த்து ஆளாக்கிவிடுவார்கள். ஆயினும் உலகில் தோன்றிய முதலாவது பெண் ஆணிலிருந்து தோன்றியது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை இதுவே அல்லாஹூதஆலா ஆதம் (அலை) அவர்களின் விலா எழும்பில் இருந்து ஹவ்வா (றழி) அவர்களை படைத்தான். இவர்களிலிருந்து தான் மனித இனம் பெருகி வளர்ந்தது.

இப்பொழுது மனித இனத்திற்கு அடித்தளமாய் அமைவது பெண்களே. இதனை அறியாத ஆண்கள் பெண்களை நசுக்கத் தொடங்கினார்கள். பெண்களை ஆண்கள் கை பொம்மைகளாக பயன்படுத்தினர். பெண்கள் ஒரு தீய சக்தி என்று குடும்பத்திற்கு அவமானத்தையும் இழுக்கையும் தேடித் தருபவர்கள் என்றும் பலர் கருதினார்கள். பெண்களுக்கு எவ்வித சுதந்திரமும் அளிக்காது சாதாரண பண்டமாற்றுப் பொருளாக பயன்படுத்தினார்கள். அறேபியாவிலும் இதே நிலை தான் காணப்பட்டது. குடும்பம் ஒன்றில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அது பெரிய அபசகுணம் என்று எண்ணினார்கள். பெண் குழந்தைகளை சிலர் உயிரோடு புதைக்கவும் முனைந்தார்கள். குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்த ஒரு உரிமையும் கொடுக்கப்படவில்லை. பெண்களுக்கு கல்வி கற்க வசதியும் அளிக்கப்படவில்லை. எந்த பெண்னையும் விரும்பிய போது மணக்கவும் விரும்பிய போது விட்டுவிடவும் ஆண்களுக்கு உரிமை இருந்தது. தாயைத் தவிர்த்த தந்தையின் ஏனைய மனைவியர் தந்தை மரணத்தின் பின் மூத்த மகனின் சொத்தாயினர். கல்வி அறிவும், நாகரீக அறிவும் குன்றி இ ருந்த அந்த காலத்தில் பெண்களின் நிலை அவ்வாறு இருந்த போதும் கல்வி அறிவும் நாகரீக வளர்ச்சியும் பெற்று விளங்கும் இக்காலத்தில் இந்த நிலை காணப்படுவதுவது வருந்தத்தக்கதாகும்.

இஸ்லாம் பெண்களுக்கு பல முக்கிய உரிமைகளை வழங்கி உள்ளது. சீவாதாரம்’ விவாகம் விவாகரத்து போன்ற விடயங்களில் போதிய அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணின் சம்பந்தத்துடனே விவாகம் செய்து கொடுத்தல் இஸ்லாம் விரும்புகின்றது. சில நாடுகளில் பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லை. அதனாலே அவ் உரிமைக்காக பெண்கள் போராடுகிறார்கள். பெண்களுக்கு உரிமை அளிக்காத சமூகம் இன்றும் காணப்படுகிறது. கல்வி கற்று ஆண்களை போலவே தனது திறமையை வெளிக்காட்ட இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது.

சிறு பாராயத்திலே பெற்றோரை பாதுகாப்பதும் பருவடைந்த பின் கணவனின் பாதுகாப்பும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. பெண்களாகிய நாமும் எமது கடமைகளை பொறுப்பாக நிறைவேற்றுவோம்.

Shazna Nawfar

பெண்கள் உலகத்தில் இல்லை எனில் மனித இனமே அழிந்துவிடும். மனித இனம் பெருகி வருவதற்கு வழியில்லாது போய்விடும். பெண்களே ஆண்களை வளர்த்து ஆளாக்கிவிடுவார்கள். ஆயினும் உலகில் தோன்றிய முதலாவது பெண் ஆணிலிருந்து தோன்றியது. இது…

பெண்கள் உலகத்தில் இல்லை எனில் மனித இனமே அழிந்துவிடும். மனித இனம் பெருகி வருவதற்கு வழியில்லாது போய்விடும். பெண்களே ஆண்களை வளர்த்து ஆளாக்கிவிடுவார்கள். ஆயினும் உலகில் தோன்றிய முதலாவது பெண் ஆணிலிருந்து தோன்றியது. இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *