அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 44

  • 8

“இவரை உனக்கு முன்னாடியே தெரியுமா?”

“நான் க்ளோரியா உலகத்தோட இளவரசன்.” என்றான் யோரி.

“சரி நீங்க எதுக்காக கோரினை தேடி வரணும்?” என்று கேட்டாள் சோஃபி.

“அவதான் என்னோட மனைவி.”

“இவன் என்ன ஒளரிக்கிட்டு இருக்கான். கோரின்!”

“அவர் சொல்றது சரிதான். என்னோட விதியை நான் பார்த்த போது இவருதான் என்னோட கணவரா வரப்போறவர் என்று தெரிஞ்சி கிட்டேன்.” என்றாள் கோரின்.

“அது சரி.. இந்த விஷயம் எப்படி இவருக்கு தெரிஞ்சது.?” என கேட்டாள் நயோமி.

“ஏன்னா நானும் விதியை அறியும் சக்தி கொண்டவன் தான்.” என்றான் யோரி.

“ஒஹ்ஹ் அதுதான் கோரின் கல்யாணமே வேண்டாம். என்று சொல்ல காரணமா?” என்றான் நாகடோ.

அதன் பின்னர் அதே மேடையில் அனைவரது திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.

********************************

3 வருடங்களின் பின்னர்…

பூமியில்.

“ரியூகி சமையலுக்கு வேண்டிய எல்லா காய்கறிகளும் வாங்கி வந்துட்டீங்களா?” என கேட்டாள் அலைஸ்.

“வரல்ல என்னா மட்டும் விட்டுடுவியா?”

“அது சரி நக்கலா.. நேரமாச்சு புரியுதா?”

“புரியுது மேடம்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“பையனோட மூணாவது பிறந்த நாள். என்ன ஸ்பெஷலாக சமைக்க போறோம்?” என்று யோசிக்கும் போதே யுகிகோ மம்மி! டாடி! என்று சொல்லி கொண்டே வந்தான்.

“என்னடா செல்லம்… அப்பா எங்க?”

“கோரின் ஆண்டி, நயோமி ஆண்டி எல்லோரும் வருவார்களா?”

“ஆமாண்டா செல்லம்.. போங்க போய் விளையாடுங்க.”

சற்று நேரத்தில் எமிலி, ஹாருஹி, மீஸா மூவரும் வந்தனர்.

“வாங்க வாங்க. உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன். வீட்டை கொஞ்சம் அலங்காரம் பண்ணனும்.” என்றாள் அலைஸ்.

“ஆமா எங்க ரியூகி?”என கேட்டாள் மீஸா.

“பெர்த் டே பேபிய தேடாம அவன் அப்பாவை தேடறே. உன்னை திருத்தவே முடியாது.” என்றாள் ஹாருஹி.

“விடுடி..” என்றாள் அலைஸ்.

அடுத்து யுகிகோவை ரியூகி தூக்கி கொண்டு வர அவனை அவர்கள் தூக்கி கொண்டு அவர்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.

*********************************

மூன்று வருடங்களுக்கு முன்பு

பூமிக்கு வந்து ரியூகியும் அலைஸும் நண்பர்களின் நினைவுகளையே மாற்றினார்கள். அலைசுக்கு ஒரு குடும்பம் இருப்பதையும், ரியூகியை காதல் திருமணம் செய்து கொண்டது போலவும் பிரமையை ஏற்படுத்தினார்கள். பின்னர் அலைஸின் விருப்பத்துக்கு இணங்க பூமியிலேயே வாழவும் ஆரம்பித்தனர். விரும்பிய போது கோன்மன் உலகுக்கு செல்லவும் வரவும் எதுவும் அவர்களுக்கு தடையாக இருக்க வில்லை.

****************************

அலைசுடைய குடும்பம் எல்லோரும் வந்திருந்தனர். அவர்களை வரவேற்க சென்றார்கள்.

“தாத்தா! பாட்டி! என்று யுகிகோ ஓடிச்சென்று அவர்களை கட்டியணைத்து கொண்டான்.

“எவ்வளவு வளர்ந்துட்டான் என்னோட குட்டி செல்லம்”

“ஹே ரியூகி எப்படி இருக்கே!” என கியோன் கேட்டான்.

“நல்லா இருக்கேன் டா… பார்த்து ரொம்ப நாளாச்சு.. எங்கே என்னோட மருமகள்?”

“சூஹி தானே. அவதான் அம்மா செல்லம் ஆச்சே” என்று சொல்ல பின்னாடியே சூஹியை தூக்கி கொண்டு சோஃபி வந்து சேர்ந்தாள்.

அலைஸ் தனது அப்பா அம்மாவையும் சகோதரிகளையும் சகோதரனையும் அவர்கள் பிள்ளைகளையும் அன்போடு வரவேற்றாள்.

அப்போது சின் கே ,”யாரையோ தேடறே மாதிரி இருக்கே.”

“உன்னை தாண்டா ராஸ்கல். எங்க என்னோட அண்ணியை நல்லா பார்த்துக்கிறே இல்லே.” என்றான் ரியூகி.

“ஆமா ஆமா.. இவங்க தான் அலைசோட பிரண்ட்ஸா அட்டகாசமாக இருக்காங்க.” என்றான் சின்.

“ஆமா ஆமா அப்படித்தான் இருப்பாங்க…” என்று சொல்லி கொண்டே நயோமி அவனை முறைத்தாள்.

மாஸ்டர் ஷா மற்றும் மாஸ்டர் கூடோ இருவரும் புனித யாத்திரை ஒன்றுக்கு சென்றுள்ளதாக பீட்டர் சொன்னார். விருந்தும் கொண்டாட்டமுமாக அன்றைய நாள் சிறப்பாக கழிந்தது. எல்லோரும் ஓரிரு நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவானதும் எல்லோரும் அவரவர் அறைகளுக்கு தூங்க சென்றதும் யுகிகோ அறைக்குள் சென்று அலைசும் ரியூகியும் ஏதோ ஒரு பரிசு பெட்டியை அவன் அருகில் வைத்து விட்டு சென்றனர். அவர்கள் சென்றதும் தூங்குவது போல் பாசாங்கு செய்த அவன் அந்த பெட்டியை திறந்து பார்த்தான்.

“வாவ்…”

அந்த அதி சக்தி வாய்ந்த பளிங்கு கல் வெண்ணிறத்திலும் தங்க நிறத்திலும் மாறி மாறி ஜொலித்தது. பக்கத்து அறையில் இருந்து மகனுக்கு குட் நைட் சொல்லி கொண்டே அலைசும் ரியூகியும் தூங்க யுகிகோ அந்த கல்லை தன்னோட சேர்த்து கொண்டு தூங்கினான்.

முற்றும்.
ALF. Sanfara.

“இவரை உனக்கு முன்னாடியே தெரியுமா?” “நான் க்ளோரியா உலகத்தோட இளவரசன்.” என்றான் யோரி. “சரி நீங்க எதுக்காக கோரினை தேடி வரணும்?” என்று கேட்டாள் சோஃபி. “அவதான் என்னோட மனைவி.” “இவன் என்ன ஒளரிக்கிட்டு…

“இவரை உனக்கு முன்னாடியே தெரியுமா?” “நான் க்ளோரியா உலகத்தோட இளவரசன்.” என்றான் யோரி. “சரி நீங்க எதுக்காக கோரினை தேடி வரணும்?” என்று கேட்டாள் சோஃபி. “அவதான் என்னோட மனைவி.” “இவன் என்ன ஒளரிக்கிட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *