அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 41

  • 131

இருட்டில் அந்த இரண்டு உருவங்களும் ஆளுக்காள் அறியாமல் மோதிக்கொண்டு விழுந்தனர்.

“ஆஹ்ஹ்…”
“பிரின்சஸ் நயோமி!!!!”

“உஸ் உஸ்… ரியூகி… சத்தம் போடாதே!” ரியூகி குரலை தாழ்த்தி மெல்ல,

“இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுறீங்க?”என்று கேட்டான் .

“சின் கே ரூம் எங்க இருக்குன்னு தேடறேன்.” என்றாள்.

“ஓஹோ. கதை அப்படி போகுதா?”

“ஆமா சாரு என்ன பண்ணுறீங்க?”

“நம்ம ஹீரோயின் ரூமுக்கு தான்…” என்றான்.

இருவரும் சிரித்து விட்டு ஆளுக்காள் பெஸ்ட் ஆஃப் லக் சொல்லிவிட்டு அவரவர் தேடிவந்த அறைகளுக்கு சென்றனர். சின் தூங்கி கொண்டிருந்தான். மெல்ல உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்ட நயோமி.

“ஓஹோ தூங்குறீங்களா? என்னை தூங்காவிடாம பண்ணிட்டு ஐயா ஹாப்பியா தூங்குறீங்களா! என்ன பன்றேன் பாருங்க இப்போ.” என்றெண்ணியவள் அவன் அருகில் வந்துஅமர்ந்து அவள் விரல்களால் அவனை வருட ஆரம்பித்தாள். அப்படியே குனிந்து அவனை முத்தமிட நினைத்த நேரத்தில் சட்டென சின் அவள் முகத்தில் கைவைத்தான்.

“ஆஹ்…”

“இங்க என்ன பண்ணுறே நயோமி.. அதுவும் இந்த ராத்திரியில்.”

அவள் சொல்ல முடியாது தவிப்பது புரிந்தது… அவன் அவளை சேர்த்து அணைத்து கொண்டான்.

“எனக்கு புரியுது? ஒரு பெண்ணோட உணர்ச்சிகளை புரிஞ்சி கொள்ள முடியாத அளவு நான் முட்டாள். இல்லை. நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு.” என்றதும் நயோமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

“ஹா ஹு” ன்னு கத்தினாள்.

“ஏய் இப்படியே கத்திக்கிட்டு இருந்தே… அரண்மனையில் இருக்கிறவங்க நான் உன்னை ரேப் பண்ணிட்டதா நினைச்சிப்பாங்க.” என்றான்.

“ஆஹா அப்படியா!”

“ஆமாம் அப்படியே”

************************************

அலைஸின் அறையில்,

“எங்க நம்ம ஆளை காணும்.” என்று ரியூகி தேட ஒளிந்திருந்து வந்து அணைத்து கொண்டாள் அலைஸ்.

“நீ வருவேன்னு தெரியும் ரியூகி.”

“அதுக்காக இப்படியா பயமுறுத்துவே!”

“ஸாரி…” இருவரும் கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டனர்.

“எதுக்காக என்னை விட்டுட்டு போனே அலைஸ்.. ?”

“நான் எங்கே போனேன். திரும்பி வரலாமுன்னு திரும்பும் போது தான். ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அப்பறம் சின் காப்பத்தி கூட்டிட்டு போனாரு.”

“சின் கே வா?”

“ஆமா… அவர் மட்டும் இல்லேன்னா… இன்னிக்கி நான் உயிரோடு இருப்பேன்னு கூட சொல்ல முடியாது.” என்றாள்.

“உன்னையும் அவனையும் ரொம்ப நெருக்கத்துல பார்த்து நானே குழம்பிட்டேன்.”

“நீங்க சொல்றது உண்மை தான். அவர் என்னை விரும்பியது உண்மை தான். ஆனா என் மனசு முழுக்க நீதான் இருந்தே ரியூகி.”என்றாள்.

“ஆனா இப்போ எந்த பிரச்சினையும் இல்லை. சின் கேவும் நயோமியும் சிங்க் ஆகிட்டாங்க.” என்றான்.

“வாவ் நிஜமாவா?”

“ஆமா”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள்.

“அதோட நம்ம சோஃபிக்கும் கியோனுக்கும் இப்போவே கல்யாணத்தை பண்ணி வெச்சிடலாம் என்னு இருக்கேன்.” என்றான்.

“அது தான் ஊரறிஞ்ச காதலாச்சே..” கொஞ்ச நேரத்தில் விடிந்ததும் மறுபடியும் யாருக்கும் தெரியாமல் அவரவர் அறைகளுக்குள் நுழைந்தனர்.

*****************************

அனைத்து விதமான ஏற்பாடுகளும் தடல் புடல் என்று நடந்தேறின. இளவரசுகள் நால்வரும் அரச ஆடைகளை அணிந்து அரண்மனை மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர்.

“சும்மா கலக்குறீங்க போங்க.”என்றான் கியோன்.

“கியோன் அவங்க கவனத்தை திசை திருப்பாதே! இன்னிக்கி ரொம்ப முக்கியமான நாள். இனிமேல் அந்த ஷாடோ ஏஞ்செல் உலகத்துக்கும் நமக்கும் இடையில் நிரந்தர தடுப்பு உருவாகிடும் அவர்களால் இனி நம்மள ஒண்ணுமே பண்ண முடியாது.” என்றாள் சோஃபி.

மைதானத்தில் நடுவில் ஒரு பெரிய தூண் இருந்தது. அதன் உச்சியில் ஒரு வெண்பளிங்கு கல் இருந்தது. இவர்கள் நால்வரும் நான்கு திசைகளிலும் மூலையில் நின்றனர். மாஸ்டர் ஷா அவரது சடங்குகளை ஆரம்பித்தார். ரியூகியும் சின் கேவும் காவலுக்கு நின்றனர். அப்போது தான் நிலம் லேசாக அதிர்வதை உணர்ந்த சோஃபி. கொஞ்சம் கூர்ந்து அவதானிக்க ஏதோ வெகு தொலைவில் இருந்து ஆபத்து வருவதை உணர்ந்து கொண்டாள்.

தொடரும்……
ALF. Sanfara.

 

இருட்டில் அந்த இரண்டு உருவங்களும் ஆளுக்காள் அறியாமல் மோதிக்கொண்டு விழுந்தனர். “ஆஹ்ஹ்…”“பிரின்சஸ் நயோமி!!!!” “உஸ் உஸ்… ரியூகி… சத்தம் போடாதே!” ரியூகி குரலை தாழ்த்தி மெல்ல, “இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுறீங்க?”என்று கேட்டான்…

இருட்டில் அந்த இரண்டு உருவங்களும் ஆளுக்காள் அறியாமல் மோதிக்கொண்டு விழுந்தனர். “ஆஹ்ஹ்…”“பிரின்சஸ் நயோமி!!!!” “உஸ் உஸ்… ரியூகி… சத்தம் போடாதே!” ரியூகி குரலை தாழ்த்தி மெல்ல, “இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுறீங்க?”என்று கேட்டான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *