அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 38

  • 49

அரண்மனை.

“என்ன சொல்லுறீங்க மாஸ்டர் ஷா. என்னோட நாலு குழந்தைகளும் இந்த உலகில் தான் இருக்குறாங்களா?” என ராணி ஆசுகி அதிர்ச்சியோட கேட்டார்.

“வாய்ப்பே இல்லை நான் தானே அவங்கள வேறு வேறு உலகங்களுக்கு அனுப்பி வைத்தேன்.” என்றார் அரசர்.

“மன்னிச்சிடுங்க அரசரே! நிழல் தேவதைகளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிட கூடாதுன்னு உங்க கிட்ட இருந்தும் இதை மறைக்க வேண்டி ஏற்பட்டு விட்டது.” என்றார்.

“என்ன?”

“ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லாம போய்டுச்சு. அவங்க இந்த உலகத்தில் இருப்பது நிழல் தேவதைகளுக்கு தெரிஞ்சி போய்டுச்சி.” என்றதும் ஆசுகி பீட்டரில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

“இன்னும் மூன்று நாளில் சூரிய கிரகணம் ஆச்சே… அதுக்குள்ள அவங்க வந்துடுவங்களா?” என பீட்டர் கேட்டார்.

“கண்டிப்பாக வந்துடுவாங்க அரசே… எனக்கு ரியூகி மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கு. நான் போய் தேவையான ஏற்பாடுகளை செய்கிறேன்.” என்று கூறி விடைபெற்றார்.

***********************

ஏழாவது நாள் மரணபாலத்தை முதலில் அடைந்தது ரியூகி குழுவினரே.

“எனக்கென்னவோ இன்னும் பயமாவே இருக்கு… நயோமி அவங்களுக்கு ஒன்னும் ஆகியிருக்காதே!” என அலைஸ் கவலையுடன் கேட்டாள்.

“சும்மா சும்மா எதுக்கு பயப்பர்ரே அதுதான் பிரின்சஸ் கோரின் எல்லாம் நல்லபடியா நடக்கும் என்னு சொன்னாங்களே.” என்றான் ரியூகி.

பழங்களையும் நீரையும் உண்டு பருகி இளைப்பாறிக்கொண்டனர். இரவு பகலாக நடந்த களைப்பு. அப்போது ஒருவர் தோளில் மற்றவர் கை போட்டபடியே நயோமியும் சின் கேவும் வந்து சேந்தனர்.

“ஏய் அங்க பாருங்க..” என சோஃபி காட்ட சந்தோசத்தில் அலைஸ் ஓடிச்சென்று அணைத்து கொண்டாள். எல்லோருக்கும் பேரானந்தம்.

“நேத்து இருந்து எங்களுக்காக காத்து கிட்டு இருந்தீங்களா?” என நயோமி கேட்டாள்.

“இல்ல.. நாங்களும் இப்போதான் வந்து சேர்ந்தோம் வழியில்…” என்று ஆரம்பித்து அலைஸ் அத்தனையும் சொல்லி முடித்தாள்.

“அப்போ ரியூகிக்கும் சக்திகள் இருக்குதா?”

“ஆமா”

“வாவ் அண்ணனும் தங்கச்சியும் கலக்குறீங்க” என்றாள் நயோமி.

“எனக்கு வயிறு கலக்குது…” என்றான் கியோன்.

“கியோன் நாம பாலத்திற்கு மேலே இருக்கோம் புரியுதா?” என்றாள் சோஃபி.

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”

“ஓகே காய்ஸ் நாம இப்போவே புறப்பட்டா தான்…” என அலைஸ் ஆரம்பிக்கும் போதே நுரீகோ வலியால் துடித்தாள். “என்னாச்சு?”

“நுரீகோ… ஒனக்கென்னாச்சு?” என லீ பதறினான்.

“இவங்களுக்கு பிரசவ வலி எடுத்து இருக்கு… இந்த நிலையில் இவங்கள கூட்டிட்டு போக முடியாது.” என்றாள் கோரின்.

“விட்டுட்டு கூட போக முடியாது..”

“இப்போ என்ன செய்வது?”

“இப்படி ஓர் சூழ்நிலை வரும் என்னு யாரும் எதிர்பார்க்கவில்லையே…” என்றான் கியோன்.

“இவளை இங்கே விட்டுட்டு நானும் எங்கேயும் வரப்போரதில்லை.”என்றான் நாகடோ.

“இல்லை உங்க நாலுபேரையும் அரண்மனைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என்னோடது. நீங்க கிளம்புங்க…நானும் என்னோட தங்கை சோஃபி, அதோட கியோனும். இவங்கள பார்த்துக்கிறோம். சின் கே உங்களுக்கு பாதுகாப்பா வரட்டும்” என்றான் ரியூகி.

“இல்ல ரியூகி இது உன்னோட கடமை நீதான் இவங்கள பத்திரமா கொண்டுபோய் சேர்க்கணும் நான் வேணுன்னா இங்கேயே இருக்கேன்.” என்றான் சின்.

அவளும் ஒருபக்கம் வலியால் துடித்தாள். அப்போது சோஃபி

“எனக்கு பிரசவம் எப்படி பார்க்கணும் என்னு தெரியும். நானும் கியோனும் இவர்களையும் குழந்தையையும் பத்திரமா கொண்டுவந்து சேர்க்கிறோம். ரியூகி! நீயும் சின் கே வும் இவங்கள கொண்டுபோய் அரண்மனையில் சேர்த்திடுங்க.” என்றாள்.

எல்லோரும் இதற்கு உடன்பட்டனர்.. அதன்பின்னர் கவலையோடு நுரீகோ கையை பிடித்து அழுதான் நாகடோ.

“இந்த உலகத்தை காப்பாற்ற நீங்க போய் ஆகணும் லீ… கவலைப்படாம போங்க கண்டிப்பாக நாங்க நலமா வந்து சேருவோம்.” என்றாள் நுரீகோ.

சிறியதொரு தற்காலிக டெண்ட் அடித்து சோபியும் நுரீகோவும் உள்ளே இருக்கே வெளியே கியோன் நின்றான். இவர்களும் பயணத்தை ஆரம்பித்தனர்.

தொடரும்……
ALF. Sanfara.

அரண்மனை. “என்ன சொல்லுறீங்க மாஸ்டர் ஷா. என்னோட நாலு குழந்தைகளும் இந்த உலகில் தான் இருக்குறாங்களா?” என ராணி ஆசுகி அதிர்ச்சியோட கேட்டார். “வாய்ப்பே இல்லை நான் தானே அவங்கள வேறு வேறு உலகங்களுக்கு…

அரண்மனை. “என்ன சொல்லுறீங்க மாஸ்டர் ஷா. என்னோட நாலு குழந்தைகளும் இந்த உலகில் தான் இருக்குறாங்களா?” என ராணி ஆசுகி அதிர்ச்சியோட கேட்டார். “வாய்ப்பே இல்லை நான் தானே அவங்கள வேறு வேறு உலகங்களுக்கு…

7 thoughts on “அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 38

  1. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

  2. Nice read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he just bought me lunch since I found it for him smile Therefore let me rephrase that: Thanks for lunch! “The capacity to care is what gives life its most deepest significance.” by Pablo Casals.

  3. Hiya very cool blog!! Man .. Beautiful .. Amazing .. I’ll bookmark your blog and take the feeds also…I’m satisfied to seek out so many useful information right here in the publish, we’d like work out extra strategies in this regard, thank you for sharing. . . . . .

  4. Good day! I could have sworn I’ve been to this site before but after reading through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *