அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 40

  • 10

“ரியூகி… உன் கூட வந்திருக்கிறது யாரு?” என்று கேட்டார் ஷா.

“அதுதான் முன்னரே சொன்னேனே மாஸ்டர் இவன் சின் கே”

“ஆஹ் உங்க மாஸ்டர் பெயர் கூட என்னவோ சொன்னாய்… ஆஹ்… மாஸ்டர் கூடோவோட மாணவன்.” என்றான் ரியூகி. அதிர்ச்சி அடைந்த மாஸ்டர்,

“என்ன மாஸ்டர் கூடோ வா…”

“அவரை உங்களுக்கு தெரியுமா?” இப்போது சின் கேவை நோக்கி மாஸ்டர்,

“நீ நீ… உன்னை வளர்த்தது அவர்தானா…” என்று கேட்டார். உடனே சின் கே வும் ஆமாம் போட மாஸ்டர் அவனை கட்டியணைத்து கொண்டார்.

“ஹே… என்னாச்சு இவருக்கு… இவனை எப்படி நீங்க?” என்று ரியூகி குழம்பி போய் இருந்தான்.

“ரியூகி, சின் கே… உங்க ரெண்டுபேருக்கும் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சி.” என்றார் ஷா. இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“ரியூகி, உன் அப்பா அம்மா யாரென்னு உனக்கு தெரியாதில்ல… அவங்க வேற யாரும் இல்லை. என்னோட தம்பி கூடோ தான் உன்னோட அப்பா. சோஃபி பிறந்த உடனே உன்னோட அம்மா இறந்துட்டாங்க.” என்றார்.

“நீ என்னோட மாஸ்டரோட பையனா? அப்போ நான்…” என சின் கேள்விக்குறியோடு நின்றான்.

“நீ என்னோட பையன் சின்… என்னோட ஒரே வாரிசு.” என்றார் மாஸ்டர் ஷா.

“என்னது இவன் உங்க பையனா?” என அதிர்ச்சி அடைந்த ரியூகி .

“இப்போ என்னோட அப்பா எங்க இருக்கார்?” என கேட்டான்.

“எனக்கு தெரியாது… லீ யோட கல்யாணத்தை நடத்தி வெச்சிட்டு போனவர் தான் அப்பறம் நான் பார்க்கவே இல்லை.” என்றான் சின்.

ரியூகி தன் தந்தையை காணாது கவலைப்பட்டான். அப்போது சின் தனது தாயை பற்றி அப்பா ஷா விடம் விசாரித்தான்.

“அம்மா எங்கே?”

“கடந்த காலங்களில் நடந்த ட்ராகன் வாரில் அந்த சோஜோ உங்க அம்மாவை கொன்னுட்டான்.” என்றார் வருத்தத்துடன். சின் கொதித்தெழுந்தான். அவனை ரியூகி ஆறுதல் செய்தான்.

“கூடோ வும் நானும் ஒரு ஒப்பந்தம் போட்டுகிட்டோம். என்னோட பையனை அவனும். அவன் பசங்களை நானும் வளர்க்கிறது என்று. அதுவே இவ்வளவு குழப்பதுக்கும் காரணம்.” என்றார்.

“விடுங்க பெரியப்பா… நாமெல்லாம் இப்போ ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். இனி என்ன சேர்ந்தே கலக்க வேண்டியது தான்.” என்றான் ரியூகி.

“அது சரி… நான் தான் அண்ணன்.” என்றான் சின் கே.

“விடு அண்ணா… பயிற்சி எடுத்துக்கலாமா?” என்று கேட்டான் ரியூகி.

“நான் தயார்” இருட்டுவதற்கு நெருங்கிய வேளை வரை பயிற்சியில் இருந்த இருவரையும் நோக்கி ஒரு காவலாளி ஓடிவந்தான்.

“பிரின்சஸ் நுரீகோ வந்துட்டாங்க.” என்றான்.

இருவரும் தொப்பென்று விழுந்தார்கள். அடுத்து யார் குழந்தையை முதலில் பார்ப்பது என முட்டி மோதி கொண்டு ஓடினார்கள். அங்கே வந்து பார்த்தால் நுரீகோ கையில் பெண் குழந்தை நாகடோ கையில் ஆண்குழந்தை அனைவரும் கொஞ்சி விளையாடி கொண்டு இருந்தார்கள்.

“ஆண்பிள்ளை, பெண்பிள்ளை சண்டை பிடிச்சவங்களை காணும்.” என சோஃபி நயோமியையும் அலைசையும் சீண்டினாள்.

“அதுதான் அண்ணி எல்லார் பிரச்சினைகளையும் தீர்த்து வெச்சிட்டாங்களே!” என்றாள் கோரின்.

அப்படியே ரியூகி மாஸ்டர் சொன்ன குடும்ப ரகசியத்தையும் எல்லோருக்கும் அறிவித்தான்.

“அதானே பார்த்தேன். சின் கேவை எங்கயோ பார்த்தது போல இருக்குன்னு அப்பவே சொன்னனே.” என்றான் கியோன்.

“ஆமா… இவர் பெரிய தீர்க்க தரிசு…” என்று கிண்டலடித்தாள் சோஃபி.

“அதிகம் பேசினா அடுத்தது. உனக்கு தான் ட்வின்ஸ் பிறப்பாங்க.” என்றான் கியோன்.

“சீ… லூசு… போடா”

“சரி சரி… எல்லோரும் போய் தூங்குங்கள். நாளைகி நிறைய வேலைகள் இருக்கு.” என்றாள் ஆசுகி.

***************************

இரவானது

அரண்மனைக்குள் இரண்டு உருவங்கள் யாருக்கும் தெரியாமல் குடுகுடுவென ஒளித்து ஒளித்து சுற்றிக்கொண்டிருந்தன. இந்த இரவில் அரண்மனைக்குள் என்ன நோக்கத்துக்காக இவை சுற்றி கொண்டு இருக்கின்றன. இவை யார். என்று யாருக்கும் தெரியாது.

தொடரும்……
ALF. Sanfara.

“ரியூகி… உன் கூட வந்திருக்கிறது யாரு?” என்று கேட்டார் ஷா. “அதுதான் முன்னரே சொன்னேனே மாஸ்டர் இவன் சின் கே” “ஆஹ் உங்க மாஸ்டர் பெயர் கூட என்னவோ சொன்னாய்… ஆஹ்… மாஸ்டர் கூடோவோட…

“ரியூகி… உன் கூட வந்திருக்கிறது யாரு?” என்று கேட்டார் ஷா. “அதுதான் முன்னரே சொன்னேனே மாஸ்டர் இவன் சின் கே” “ஆஹ் உங்க மாஸ்டர் பெயர் கூட என்னவோ சொன்னாய்… ஆஹ்… மாஸ்டர் கூடோவோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *