இறுதியானது

  • 61

மனிதா!
நீ உலகில்
பல பட்டங்கள்
பெற்றாய் – உன்
இறுதிப் பட்டம்
“மைய்யத்” என்பதை
மறந்து விடாதே!
 
மனிதா!
நீ உலகில்
சொகுசு வாகனங்களில்
பயணித்தாய் – உன்
இறுதி வாகனம்
“சந்தூக்” என்பதை
மறந்து விடாதே!
 
மனிதா!
நீ உலகில்
வண்ண ஆடைகளை
அணிந்தாய் – உன்
இறுதி ஆடை
“கபன்” என்பதை
மறந்து விடாதே!
 
மனிதா!
நீ உலகில்
மாடி வீடுகளில்
வாழ்ந்தாய் – உன்
இறுதி வீடு
“கப்ர்” என்பதை
மறந்து விடாதே!
 
 

Ibnu Asad

 

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம்…

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *