அனர்த்தத்தின் போது தேசிய ஒற்றுமையை வெளிக்காட்டிய கொடபிடிய முஸ்லிம் மக்கள்

அக்குரஸ்ஸ நகரிற்கு அண்மையில் கடந்த காலம் முதல் இன்றுவரை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் ஓர் பிரதேசமே கொடபிடிய கிராமம். இங்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய மீலாத் நபி விழாவின் போதே விடுதலைப் புலிகளின் இறுதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அவ்வாறே சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றனர். அவ்வாறே கொடபிடியவில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலும் பிரசித்தி பெற்ற ஒரு பள்ளிவாசலாகும்.

  1. மே மாதம் 26,27 ம் திகதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இப்பிரதேசம் உட்பட அதனைச் சூழவுள்ள பல பிரதேசங்களும் மூழ்கியதுடன் ஒரு சிலருக்கு எஞ்சியது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மாத்திரமாகும். இதனையறிந்த முஸ்லிம் வியாபாரிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சுயேட்சைக் குழுக்கள் வெள்ளம் வற்றிய பின்னர் இப்பிரதேசத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தனர்.அவற்றில் உலர் உணவுப்பொருட்கள், ஆடையணிகள், வீட்டுக்குத் தேவையான  பொருட்களும் அடங்குகின்றது. சுயேட்சைக் குழுக்களினால் வீடுகள் மற்றும் கிணறுகள் என்பன சுத்தம் செய்து கொடுக்கப்பட்டன.

இதில் விசேட அம்சம்  என்னவென்றால், அனைத்து உதவிகளும் பள்ளிவாசல் மௌலவி உட்பட நிர்வாக சபை அங்கத்தவர்களினால் பாரபட்சமின்றி இப் பிரதேச சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமையாகும்.  அரச உதவியின்றி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இதுவொரு ஆறுதலாக அமைந்தது. சிங்கள மக்களின் வீடுகள் மாத்திரமன்றி கிணறுகளும் முஸ்லிம் இளைஞர்களினால் சுத்தம் செய்யப்பதுடன், இப் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற விகாரையும் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட உதவிகள் கிராம பிரதானிகளுக்கு வழங்கப்பட்டதுடன், சில பிரதானிகள் பொருட்களை பெற்றுக்கொண்டு விநியோகிக்காமல் இருந்தது பள்ளி நிர்வாகத்தின் தவறல்ல.

அரச உதவியின்றி பல்வேறு தனவந்தர்கள் ஊடாக வழங்கப்பட்ட இப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது குறிப்பிட்ட பிரதானிகளின் கடமையாகும். பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர்களினால் பாரபட்சமின்றி இப் பிரதேச சிங்கள மக்களுக்கும் உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இது இலங்கை நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைவதோடு அனைத்து மக்களுக்கும் இது சிறந்த முன்மாதிரியாகும்.

Akuressa Panadhugama

Thilakasiri Wikramasinka

Leave a Reply

%d bloggers like this: