அவள் காதல்தான் வேண்டும்

  • 13

அவளருகில் அடைக்களம் தேடும்
என் காதல் உணரவில்லையே
அகதியாய்த்தான் வாழ்கிறது என்று

கண்ணீர் துளிகளில்
கரைந்து போகும் இரவுகளே
காதலினால் கதரும் என் உயிரை
காவு கொள்ள விரும்பவில்லையோ

மலரை கசக்கி
மண்மீது எறிந்தது போல்
என் மனதை கசக்கி
என்மீது எறிந்து செல்கிறாள்
எறும்பில் விழுந்த இலையாய்
என்னில் அது விழுகிறது

கிடைக்காதென உணர்ந்தும்
மழலையாய் மனம் அடம்பிடிக்கிறது
அவள் காதல் வந்து
கைகூடிவிடாதா என்ற ஏக்கம் அதிகமானதால்

பூக்களை உரசும்
வண்டுகள் கூட வாசம் கண்டுதான்
நெருங்குகிறது
ஏனோ என்னை விரட்டியும் கூட
அவள் நேசம்தான் கேட்கிறது
இங்கு என் மனம்

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

அவளருகில் அடைக்களம் தேடும் என் காதல் உணரவில்லையே அகதியாய்த்தான் வாழ்கிறது என்று கண்ணீர் துளிகளில் கரைந்து போகும் இரவுகளே காதலினால் கதரும் என் உயிரை காவு கொள்ள விரும்பவில்லையோ மலரை கசக்கி மண்மீது எறிந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *