பல்கலைக்கழகத்தினூடாக இன நல்லிணக்கம்

பல்கலைக்கழகத்தினூடாக இன நல்லிணக்கம்

பல கலைகள் கற்கவென
பல்கலையில் பாதம் பதித்து
சிலைகளென வடிக்கப்பட்டு
சிகரம் தொடத் துடிக்கும்
சக இனச் சொந்தங்களே….!!!

தேசக் கொடியிலே இருக்கட்டும்
வர்ண பேதம்
தேச நேசர்கள் எம்மில் வேண்டாம்
கர்ண பாதகம்

எம்மில் ஓடும் உதிரமும் செம்மை தான்
மண்ணில் விழும் நிழலும் கருமை தான்
நாமம் ஒன்றே நான்காய் வேறு
வேண்டாம் இனியும் இனக் கூறு

இதழின் இணக்கம் மலராக மணக்கும்
இறகின் இணக்கம் சிறகாக பறக்கும்
பல்கலைத் தாயின் பாலகர்கள்
எம்மில் உதிக்கும் இணக்கம்
வையகத்திலே சிறக்கும்…

முளைக்கும் இன முறுகலை
முளையிலே கிள்ளி எறிவோம்
களை பிடுங்கிய நல் வாழ்வினை
கிளை பரப்பிடச் செய்வோம்…

ஓரினமாய் பல்லினமும் கைகோர்த்து
ஆணிவேரென இணக்கத்தை நிலைநிறுத்தி
பார் போற்றும் மாணாக்களாய்
பல்கலையிலே பயணிப்போம்…

ILMA ANEES
SEUSL
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்