HNDA – AAT (IAT – USA) சம அந்தஸ்து

images (4)aat logo සඳහා පින්තුර ප්‍රතිඵල

இலங்கை தொழிநுட்பக்கல்லூரி HNDA தராதரத்திற்கு அமெரிக்க AAT (IATUSA) அமெரிக்க கணக்கீட்டியலாளர் தராதரம் சம அந்தஸ்து அங்கீகாரம் அளித்துள்ளதாக (IATUSA) இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிநுட்பக்கல்லூரிகளில் HNDA மூன்றாண்டுக் கல்வியை நிறைவு செய்தவர்களின் தராதரத்திற்கு அமெரிக்க கணக்கீட்டியலாளர் நிறுவனம் பரீட்சைகளிலிருந்து முழுவிலக்களித்து “அஸோஸியேட் அக்கவுன்டிங் டெக்னீசஸியன்” (AIAT) தராதரத்தை வழங்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டில் IAT (USA) யின் இலங்கையில் நியமிக்கப்பட்ட பிரதிநிதி கலாநிதி குமரகுருபரன் இலங்கையின் தொழிநுற்பக்கல்லூரி பாடத்திட்டத்தை சமர்ப்பித்து பரீட்சை விலக்களிக்கக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

ஆங்கில மொழி மூலத்தில் பயின்றவர்களுக்கு மட்டுமன்றி தமிழ் மொழி மூலம் கற்கை நெறியில் சித்தி எய்தியவர்களும் AIAT (USA) தராதரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

IAT (USA) ஆனது AAT (UK) , ACCA (UK) ஆகியவற்றினால் இணை அந்தஸ்து வழங்கப்பட்ட நிறுவனமாகும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு charteredacc.nk@gmail.com என்னும் முகவரியூடாக இலங்கை பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Vidivell News

Leave a Reply

%d bloggers like this: