அவளும் ஓர் சிங்கப்பெண்ணே!

  • 10

நான்கு சுவற்றினுள் தன்
உலகையே வடிவமைத்திருந்தாள்
உலகை மறந்து!
உறவு ஆண்கள் வருகை தந்தாலும் தன்
உலகான நான்கு சுவர் அறையை நோக்கி ஓடினாள்
தன்னை மறந்து!
சிறு தும்மலுக்கும் அன்புத் தாயையே நாடினாள்
அரவணைப்பு புரிந்து!
சிறு தேவைகளுக்கும் தம்பியே கடைக்குச் சென்றான்
அக்காவின் பாசமறிந்து!

தேவையான அனைத்தும் கேட்காமலேயே
அறையை நோக்கி வந்தன
‘அவளது பாசத் தந்தை’ மூலம்!
பாசத்துடன் பரிசுப்பொருட்களும்
வீடு நோக்கி வந்தன
‘அவளது அண்ணன்’ மூலம்!

பாதையில் நடந்தால்
பாதம் கிழிந்திடுமோ என அஞ்சி
வெளியேறும் போதெல்லாம்
வண்டிகளை வீட்டார் அனுப்பி வைத்தனரே!
தனியாய்ப் போனால் தடுக்கிடுவாளென்று
அஞ்சி அன்னையும் துணையாய் சென்றாரே!

‘மரதன்’ போன்ற வாழ்கைப் பயணத்தில்
அவள் விரும்பியதோ ‘கல்விப்பயணம்’!!

முயன்று படித்து சித்தியெய்த
பல்கலைக்கழகம் காத்திருந்தது
இவள் வரவுக்காக!
குரோதமனம் கொண்ட
ஒரு சிலரோ காத்திருந்தனர்
இவள் வழுக்கி விழுவதற்காக!

‘படித்தது போதும் முடித்துக் கொடு’ வென
தாயை ஒருசிலர் நச்சரித்தனர்!
‘தூர தேசம் அனுப்பிவிடாதே, காலம் சரியில்லை’ யென‌
தந்தையை ஒருசிலர் எச்சரித்தனர்!

பயந்த பெற்றோரோ அவளிடம் கேட்க
‘கல்வியே’ தான் கண்ட கனவென்றாள்!
‘போராடுவதே’ தான் கொண்ட
இலட்சியம் என்றாள்!
முன்னேறி ‘சாதிப்பதே’ தான் கொண்ட
காதல் என்றாள்!
வீடு தேடி பல வரன்கள் வர
லட்சியப் பயணமே தன் முடிவென்றாள்!

அவளோ கனவைத் தேடியோட நினைக்க
ஒரு சிலரோ நினைத்தனர்
கணவனின் பின்னால் ஓடவைக்க!!

‘இலகுவாய் நல்ல வாழ்க்கை
அமையப் போகிறதே! விட்டுவிடாதே!’ யென
உறவினர்கள் கூற
உறவுகளின் வீட்டுக்குப் போவதையே
‘விட்டுவிட்டாள்’!

விமர்சனங்கள் பல முன்னே விழ
அனைத்தையும் தாண்டித் தெரிவானாள்
பல்கலைக்கழகத்தினுள்!

பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு,
விழும் போதெல்லாம் அணைக்கும்
அன்னையை விட்டு
முகபாவனையைக் கொண்டே
தன்னை புரிந்து கொள்ளும்
தந்தையை விட்டு
கூடவே இருந்து அரவணைத்த
இரத்தபந்தங்களை விட்டு
பல்கலைக்கழகம் நோக்கி நடந்தாள்
ஆனந்தக் கண்ணீர் விட்டு!

சாப்பாடு சரியில்லை!
ஒரு பிடியும் வயிற்றினுள் இறங்கவில்லை!
ஒழுங்கான தூக்கமில்லை!
எங்கு திரும்பினாலும் கொசுத்தொல்லை!
விரிவுரைகளுக்காக நடப்பதற்கோ
ஓர் எல்லையில்லை!
ஆனால் இதுயெதுவுமோ
அவள் கண்களில் படவில்லை!!

போராடினாள்!
போராடிக் கொண்டிருக்கிருக்கிறாள்!!
போராடுவாள்!

அவளும் ஓர் சிங்கப்பெண் தான்!
அனைத்து சிங்கப் பெண்களுக்கும்
“மகளிர் தின வாழ்த்துக்கள்”

Ifham Aslam

நான்கு சுவற்றினுள் தன் உலகையே வடிவமைத்திருந்தாள் உலகை மறந்து! உறவு ஆண்கள் வருகை தந்தாலும் தன் உலகான நான்கு சுவர் அறையை நோக்கி ஓடினாள் தன்னை மறந்து! சிறு தும்மலுக்கும் அன்புத் தாயையே நாடினாள்…

நான்கு சுவற்றினுள் தன் உலகையே வடிவமைத்திருந்தாள் உலகை மறந்து! உறவு ஆண்கள் வருகை தந்தாலும் தன் உலகான நான்கு சுவர் அறையை நோக்கி ஓடினாள் தன்னை மறந்து! சிறு தும்மலுக்கும் அன்புத் தாயையே நாடினாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *