குரங்கு மனசு பாகம் 57

  • 15

இப்படியே ஒன்றிரண்டாய் மாதங்கள் பறந்தோட சர்மியில் நிறைய மாற்றங்கள். ஆரம்பம் முழுவதும் வாந்தியும் மயக்கமுமாய் காலம் கடாத்தியவள் உடல் பருமன் அதிகரித்து, அழகு குறைந்து, பார்க்கப் பாவமாய் கிடந்தாள். ஆயினும் அவளின் இக் கஷ்ட காலத்திலே கணவனின் ஆறுதலும், ஒத்தாசையும், அரவணைப்பும் தாராளம் கிடைத்தது. சின்னவனும் நினைவு வரும் போதெல்லாம் ஓடிவந்து “தங்கச்சிக் குட்டி” எனத் தாயின் வயிற்றில் கைவைத்துக் கொள்வதும், செல்லும் இடமெல்லாம் தங்கச்சிக்கு என்று பொருட்கள் வாங்குவதும், “அவசரமா நாநிகிட்ட வந்துடுங்க தங்கச்சி” என்று ஆசையாய் சொல்வதும் என எல்லோருக்கும் பிஞ்சுக் குழந்தையை காண்பதில் அதீத ஆர்வம் தான்.

“சர்மிம்மா இன்னக்கி ஷெக்கப் கு போவனும் ஞாபகம் இருக்கல்ல”

“ஓம் ஹபி, அதுக்கு தான் ரெடி ஆவிட்டு இருக்கன். நீங்க நம்பர் புக் பண்ணினா?”

“ஓம்டா, அப்பவே புக் பண்ணிட்டன். ரெடி ஆவிட்டா போய் வரலாம். நான் நெனச்சுறதுக்கு இதுதான் லாஸ்ட் செக்கப் ஆஹ் இருக்கும். அடுத்த முற புள்ளய தூக்கிட்டு தான் போகவரும்” ஆசையாய் கணவன் சொல்ல பதிலுக்கு சிரித்தவள்,

“நானும் தங்கச்சிகுட்டிய டீவில பார்க்க வருவன், நானும் வாரன் அபி” என கெஞ்சிக் கொண்டிருந்த சின்னவனையும் தயார் படுத்திக் கொண்டனர்.

“மகள் நானும் வரட்டா? என்ன ஏதுன்னு சரியா டாக்டர்கிட்ட கேட்டுக்கனும். புள்ளயயும் கூட்டிட்டு போறது. தனிய கஷ்டம் ஆவுமோ தெரியா?”

“உங்களுக்கு ஏலும்ன்டா வாங்கம்மா, ட்யர்ட் ஆஹ் இருக்கும்னு தான் நான் கூப்புடல்ல.”

“அப்புடி ஒன்னும் இல்ல புள்ள, ரெடி ஆவிட்டு வாரன்”

எல்லோரும் தயாராகிக் கிளம்பிப் போக, அதீக் தன்னவளுக்கு சிரமமின்றி பக்குவமாய் வாகனத்தை செலுத்தினான். செல்லும் வழியில் குழந்தையின் துடிப்பினை குறைவாக உணர்ந்த சர்மி, வயிற்றில் கைவைத்து அதையே கவனித்தவளாய் பயணமானாள்.

“சர்மிம்மா டாக்டர் வந்திருக்கும் நீங்க மேல போங்க, நான் காசு கட்டிட்டு வாரன் ஓகேயா?” இறங்கும் இடம் வந்ததும் கணவன் சொல்ல தலையாட்டியவளாய் தாயுடன் உள்ளே சென்றாள்.

“உம்மா எனக்கு இடுப்புல புடிக்குது..” காலையில் இருந்து மகளிடம் தென்பட்ட சின்னச் சின்ன மாற்றங்கள் தாயிடத்தே பிரசவ நேரம் நெருங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டிருந்தாலும் காட்டிக் கொள்ளாதிருந்தவள் சர்மி இப்படிச் சொல்லப் பயந்து போனாள்.

“என்னடா? என்ன சொல்ற சர்மி?”

“ஆய் மா வலிக்குது, ஆய்.. என்னால முடியல்லம்மா..”

“ஓகே ஓகே மா…”

அருகில் கிடந்த ஆசனத்தில் மகளை இருப்பாட்டி விட்டவள் மருமகனுக்கு போன் செய்து அவசரமாக வரவழைத்தான்.

“என்னடா கண்ணு? நல்ல வருத்தமா?” மாமி நிலைமையை சொன்னதும், காற்றை விட வேகமாய் வந்து நின்றவன் மனைவியை பற்றிக் கொண்டான்.

“என்னால முடியல்ல ஹபி” சொல்லி முடிக்கையிலே வோட்டர் பேக் வெடித்து அவள் கால்களின் வழியாக நீர் வடிய பதறுப் போனாள் சர்மி.

“ஹபி பிலீஸ் சேவ் மை பேபி” நடுங்கிப் போன அதீக், உதவிக்கு யாரையும் அழைக்கும் திராணியற்றவனாக, அந்த தனியார் வைத்தியசாலையிலேயே தன்னவளை பிரவசத்துக்காக விட்டான்.

“டாக்டர் எவ்வளவு செலவு ஆவினாலும் பரவல்ல, எனக்கு ரெண்டு உசுரும் வேணும்” ஏதோ படபடப்பில் அதீக் பதற, தனியார் வைத்தியசாலை என்பதால் மனைவிக்கு ஆறுதலாய் அதீக் உள்ளே அழைக்கப்பட்டான்.

“நான் நான் ஆஹ்” ராபியாவுக்கும் மருமகன் உட்செல்வதே பொருத்தமாய்த் தோன்ற, அதீகை தைரியப்படுத்தி வழியனுப்பியவள் எல்லாம் நல்லபடி முடிய இறைவனை வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தாள்.

அங்கு மனைவி துடித்துக் கொண்டிருந்த அறைக்குள் மெதுவாக அடியெடுத்து வைத்தவனின் கால்கள் நடுக்கம் பிடித்துக் கொள்ள, அடுத்தடுத்த விடயங்களை அவள் அன்புக் கணவனால் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

இப்படியே ஒன்றிரண்டாய் மாதங்கள் பறந்தோட சர்மியில் நிறைய மாற்றங்கள். ஆரம்பம் முழுவதும் வாந்தியும் மயக்கமுமாய் காலம் கடாத்தியவள் உடல் பருமன் அதிகரித்து, அழகு குறைந்து, பார்க்கப் பாவமாய் கிடந்தாள். ஆயினும் அவளின் இக் கஷ்ட…

இப்படியே ஒன்றிரண்டாய் மாதங்கள் பறந்தோட சர்மியில் நிறைய மாற்றங்கள். ஆரம்பம் முழுவதும் வாந்தியும் மயக்கமுமாய் காலம் கடாத்தியவள் உடல் பருமன் அதிகரித்து, அழகு குறைந்து, பார்க்கப் பாவமாய் கிடந்தாள். ஆயினும் அவளின் இக் கஷ்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *