குரங்கு மனசு பாகம் 59

  • 19

இங்கனம் இரண்டாவது குழந்தையைக் கண்டு, வீடு வரும் போது தன் மாமியாரைக் காண வேண்டுமென்ற சர்மியின் விருப்பும், அங்கு நடந்த அசம்பாவிதங்களும் இருவர் உள்ளங்களையும் வதைத்துக் கொண்டிருந்தன. இனியும் வாஹிதா இறங்கப் போவதில்லை என்ற நிலையில், தம் மகளைப் பெற்ற சந்தோஷத்தையாவது கொண்டாட முடியாக் கவலையோடு கிடந்தான் அதீக். பதிலுக்கு தன்னவனின் அகத்தே நிறைந்திருந்த ஆற்றப்படா வடுக்களை சரிப்படுத்த திராணியற்றவளாய், தான் செய்த தவறுக்கு தன்னவன் தண்டிக்கப்படும் நிலைமையை எண்ணி உருகிக் கொண்டிருந்தாள் சர்மி.

“தங்கச்சிக் குட்டி, தங்கச்சிக் குட்டி”

மூத்தவன் கொஞ்ச, ஏதோ அநியாயம் செய்துவிட்டான் போல் கேஷ் என்று அழத்துவங்கி விட்டாள் சின்னவள். ஏற்கனவே மனம் நொந்த நிலையில் இருந்த சர்மிக்கு மகளின் அழுகைச் சத்தம் மகன் மீது எரிச்சலை ஏற்படுத்த,

“கொஞ்சம் வெளிய போங்க மகன், சும்மா தங்கச்சிய அழ வெச்சாம. என்னால ஏலா” மூத்தவனின் கையைப் பிடித்து வெளியே விட்டாள்.

“ஏன்மா புள்ள மேல பொறிஞ்சி விழுகுறீங்க, அவன் எறக்கத்துல தானே விளயாடினான்.” மகளின் இச்செயல் ராபியாவிற்கு கோவத்தை உண்டு பண்ண,

“நீங்க ஒன்னும் பேச வேணாம் மா.. என் புள்ளய நான் தான் வளத்துக்கனும்.”

“சரி இப்போ அவன் என்ன செஞ்சான்?”

“உங்களுக்கு தேவயில்லாத விஷயங்களில தல போடாதிங்கம்மா” சர்மி இப்படி குரல் உயர்த்திப் பேசியதே இல்லா நிலையில் வாய்மூடி அகன்றாள் ராபியா.

“சர்மி..” முன் ஹோலில் அமர்ந்தவனாய் நடப்புக்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்தான் அதீக்.

“ஆஹ் சொல்லுங்க ஹபி” சின்னவளுக்கு உடைமாற்றிக் கொண்டே கணவனின் முகத்தைக் கூட பார்க்காமல் பதில் கொடுத்தாள்.

“என்னம்மா? என்ன கோவம்? எல்லோர் கூடவும் எதுக்கு இப்புடி முரண்பட்றீங்க?” அவள் எதுவும் பேசவில்லை.

“சர்மி உங்ககிட்ட தான் கேக்குறன்.”

“ஹபி பிலீஸ் என்ன தனிய விடுங்க..”

“அப்போ நான் போகவா?”

எ… எங்க?” பதறித் துடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் சர்மி.

“என்னடா இது? எதுக்கு இந்தளவு டென்ஷன் ஆவுறீங்க. முன்னால போய் அமர்ந்துக்கவான்னு கேட்டன் டா,”

ஹ்ம்ம்ம்…”

சர்மியால் இப்போ சில விடயங்களை தாக்குப் பிடிப்பது பெரும் சிரத்தை தான். அவளின் அகம் அத்தையின் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலிபரப்பிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் வெந்து போயிருந்தாள்.

“நீங்க என்கூட இரக்கம் இல்லயா உம்மீ”

நேரம் சிறிது நகர, விம்மிக் கொண்டே தாயை நாடி வந்த மகனின் கேள்வி, அவளை பதற வைத்திட்டு. தான் கொண்ட சஞ்சலத்துக்கு தன் தாயையும், மகனையும் பழியாக்கி விட்ட நினைப்பு அப்பொழுது தான் எட்டிப்பார்க்க, மகனை தூக்கி வாரியணைத்துக் கொண்டாள்.

“நீங்க தங்கச்சி கூடவா எறக்கம் உம்மி,..”

“நோ.. நோ டா கண்ணு. ஏன்ட புள்ள கூடவும் உம்மி எறக்கம் தான்.”

“அப்போ எதுக்கு எனக்கு ஏசினீங்க உம்மி?”

“உம்மி கொஞ்சம் டென்ஷன் ல இருந்தன் தங்கம். சொறி டா உசுறு” கண் கலங்க மகனை மீள் அணைத்துக் கொண்டாள்.

“சர்மி…”

ஏதோ திட்டத்தோடு, சிந்தனையை சரிப்படுத்திக் கொண்டு, மனைவியின் அனுமதிக்காக அவளை அழைத்தான் அதீக்.

“சர்மி நா… நான் உம்மாக் கிட்ட கொஞ்சம் போய் வரட்டா?”

சங்கடமாய் கேட்க, ஒருகணம் அப்படியே இடிந்து போனாளவள். தன் மாமியாரிடம் தன்னை விட்டுக் கொடுக்காது சவால் விட்டு வந்தவர், மீண்டும் இப்பக்கமே வரப்போவதில்லையென உறுதியாய் சொல்லி வந்தவர் இப்படியொரு கேள்வியைத் தொடுப்பாரென அவள் கனவிலும் நினைக்கவில்லை. என்றாலும் எதையுமே காட்டிக் கொள்ளாமல், வெளிப்படையாய் எந்த மறுப்பும் இன்றி.

“தாராளமா போய் வாங்க ஹபி”

தலையசைத்த மனைவியின் நுதலில் தன் இதழ்களைப் பதித்தவன், அவள் உள் நிலையை வாங்கிக் கொள்ளாமல் உடனே தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு தன் தாயைக் காண விரைந்தான்..

கதை தொடரும்…
Aathifa Ashraf

இங்கனம் இரண்டாவது குழந்தையைக் கண்டு, வீடு வரும் போது தன் மாமியாரைக் காண வேண்டுமென்ற சர்மியின் விருப்பும், அங்கு நடந்த அசம்பாவிதங்களும் இருவர் உள்ளங்களையும் வதைத்துக் கொண்டிருந்தன. இனியும் வாஹிதா இறங்கப் போவதில்லை என்ற…

இங்கனம் இரண்டாவது குழந்தையைக் கண்டு, வீடு வரும் போது தன் மாமியாரைக் காண வேண்டுமென்ற சர்மியின் விருப்பும், அங்கு நடந்த அசம்பாவிதங்களும் இருவர் உள்ளங்களையும் வதைத்துக் கொண்டிருந்தன. இனியும் வாஹிதா இறங்கப் போவதில்லை என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *