கண்ணிலே வைத்து பெண்மையை போற்று

  • 11

விடியாத இரவுகள்
விழிகளுக்கு தூரம்தான்
தோன்றாத காட்சிகள்
கற்பனைக்கு தூரம்தான்…

முற்றாத முதிரைக்கு
தோற்றத்தில் விலையில்லை
முற்றிய கன்னிப்பெண்ணுக்கு
முகவரிக்கு முதலீடு தொல்லை…

வீராப்பு பேசிடும் ஆண்மகனே
விலைகொடுத்து வாங்குவதற்கு
பெண்மை என்ன விலைகொடுத்து
வாங்கும் சந்தைப்பொருளா

ஆடை விலகிடுகையில்
அலங்கரிக்கும் உன்விழிகள்
அழகாத்தான் தோன்றுகிறது
அடுத்த உன் சந்ததிகள்

கட்டிய மனைவிதானே
கக்குவதெல்லாம் கேட்டுதான் ஆகனும்
கண்டபடி கசக்கி பிழியும்
கதாபாத்திரத்தின் நாயகத்தலைவனே

அடக்கியாண்டது போதும்
சிறகையுடைத்து சித்திரவதை
செய்தது போதும்
சுதந்திர பறவைகளாய் பறந்திடட்டும்
விட்டு விடு

அற்ப சுகத்திற்காய் பிழிந்தெடுக்காதே
பெண் என்பவள் வெறும் சதையல்ல
உணர்வுகளின் மாளிகை
பூவை விட மென்மையாய் பார்

வலி கொடுக்கும் உளியாய்
நீ கொடுக்கும் வலியெல்லாம்
தாங்குவதெல்லாம் எதிர்த்து பேசத்தெரியாமல் அல்ல
தன் வலிகளை மறைத்து
உன் புன்னகையை ரசிப்பதற்குதான்

விலையுயர்ந்த ஆபரணங்களை
விலை கொடுத்து
வாங்கி கொடுத்தால் மட்டும்
அவள் மனம் பூர்த்தியடையும்
என்று நினைத்து விடாதே

பாராட்டுக்கு ஏங்குபவள் பெண்
சின்ன சின்ன செயல்களுக்கு
வார்த்தைகளால் பாராட்டிப்பார்
அவள் ஆனந்தத்தின் அர்த்தம் அறிவாய்

உன்னை கருவில் சுமந்தவளும் பெண்தான்
உன்கருவை சுமப்பவளும் ஒருபெண்தான்
இழிவுச்செயல்களை விரட்டி
கண்ணிலே வைத்து
பெண்மையை போற்றுவோம்…

அனுகவி றிப்கான்,
அட்டாளைச்சேனை-06

விடியாத இரவுகள் விழிகளுக்கு தூரம்தான் தோன்றாத காட்சிகள் கற்பனைக்கு தூரம்தான்… முற்றாத முதிரைக்கு தோற்றத்தில் விலையில்லை முற்றிய கன்னிப்பெண்ணுக்கு முகவரிக்கு முதலீடு தொல்லை… வீராப்பு பேசிடும் ஆண்மகனே விலைகொடுத்து வாங்குவதற்கு பெண்மை என்ன விலைகொடுத்து…

விடியாத இரவுகள் விழிகளுக்கு தூரம்தான் தோன்றாத காட்சிகள் கற்பனைக்கு தூரம்தான்… முற்றாத முதிரைக்கு தோற்றத்தில் விலையில்லை முற்றிய கன்னிப்பெண்ணுக்கு முகவரிக்கு முதலீடு தொல்லை… வீராப்பு பேசிடும் ஆண்மகனே விலைகொடுத்து வாங்குவதற்கு பெண்மை என்ன விலைகொடுத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *