காத்திருப்பேன்

  • 14

நீ தினமும் போகும் பாதையில்
நான் உனக்கு காவல் காரனாய்!
நீ தினமும் கூட்டி வீசும் குப்பைகளில்
நான் கழிவுகளாய்!

நீ தினமும் ஏசும் வார்த்தைகளில்
நான் பிரிதொரு வசனமாய்!

நீ எழுதும் கவிதைகளில்
நான் ஒரு சில கற்பனை வரிகளாய்!
நீ தினமும் பேசும் வார்த்தைகளில்
நான் ஒரு சில வார்த்தைகளாய்!

நீ தினமும் தூக்கி எறியும் கைக்குட்டைகளில்
நான் ஒரு சில வியர்வை துளிகளாய்!

நீ தினமும் நினைக்கும் நினைவுகளில்
நான் ஒரு சில நினைவலைகளாய்
வரக் காத்திருப்பேன்!
நீ என்னைக் காதலனாய் ஏற்கும் வரை!

H.F. Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

நீ தினமும் போகும் பாதையில் நான் உனக்கு காவல் காரனாய்! நீ தினமும் கூட்டி வீசும் குப்பைகளில் நான் கழிவுகளாய்! நீ தினமும் ஏசும் வார்த்தைகளில் நான் பிரிதொரு வசனமாய்! நீ எழுதும் கவிதைகளில்…

நீ தினமும் போகும் பாதையில் நான் உனக்கு காவல் காரனாய்! நீ தினமும் கூட்டி வீசும் குப்பைகளில் நான் கழிவுகளாய்! நீ தினமும் ஏசும் வார்த்தைகளில் நான் பிரிதொரு வசனமாய்! நீ எழுதும் கவிதைகளில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *