முஸ்லிம் மாணவிகளுக்கெதிரான போலிக் குற்றச்சாட்டு

IMG-20170817-WA0028
IMG-20170817-WA0005

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த . உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­விகள் சிலர் தமது ஆடை­களைப் பயன்­ப­டுத்தி பரீட்சை மோச­டியில் ஈடு­ப­டு­வ­தாக இணை­ய­த­ளங்கள் மற்றும் சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தில் பிர­பல பாட­சாலை ஒன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயர்­தரப் பரீட்சை நிலை­யத்தில் பரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் மாணவி ஒருவர் தனது ஆடைக்குள் புளு டூத் கரு­வியை மறைத்து வைத்து  பரீட்சை எழு­திய நிலையில் கையும் மெய்­யு­மாகப் பிடிக்­கப்­பட்டு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாக கடந்த திங்கட்கிழமை தமிழ்  இணையத்தளம் ஒன்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து மேற்­படி விவ­காரம் சமூக வலைத்­த­ளங்­களில் கடும் வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட்டுச் சென்­றதை அவ­தா­னிக்க முடிந்­தது.

எனினும் இந்த செய்­தி­ இட்­டுக்­கட்­டப்­பட்­டது என்­பதை அப் பகு­தியைச் சேர்ந்த கல்வி அதி­கா­ரி­களும் பல்­வேறு சமூக அமைப்­பு­களும் முக்­கி­யஸ்­தர்­களும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக  இந்த விவ­காரம் தொடர்பில் சம்­மாந்­துறை வலயக் கல்விப் பணிப்­பாளர் ஏ.எஸ். அகமட் நியாஸ், இலங்கை பரீட்சை திணைக்­க­ளத்தின் ஆணை­யா­ள­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார். அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கிற க.பொ.த. (உ/த) பரீட்­சையில் சம்­மாந்­துறை வல­யத்தைச் சேர்ந்த பிர­பல்­ய­மான பாட­சாலை ஒன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை (11.08.2017) பரீட்சை மண்­ட­பத்தில் மாணவி ஒருவர் பரீட்­சையின் போது புளூடுத் (Bluetooth), ஹெட்செட் (Headset) உத­வி­யுடன் பரீட்சை எழு­தி­ய­தா­கவும், அவரை மேற்­பார்­வை­யாளர் கையும் மெய்­யு­மாகப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும்,  மாணவி பரீட்சை செயற்­பாட்டிலிருந்து இடை­நி­றுத்­தப்­பட்டு பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் கடந்த 13 மற்றும் 14 ஆம் திக­தி­களில் இணை­யத்­த­ளங்கள் மூல­மாக செய்­திகள் வேக­மாகப் பரவி சம்­மாந்­துறை மாணவர் மத்­தி­யிலே பாரி­ய­தொரு பதற்­றத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

சம்­மாந்­துறை வல­யத்தில் மொத்­த­மாக 13 நிலை­யங்­களில் பின்­வ­ரு­மாறு உயர்­தரப் பரீட்சை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றது. கமு / சது/ சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் 5 நிலை­யங்கள், கமு/ சது/ அல்– மர்ஜான் மகளிர் கல்­லூ­ரியில் 4 நிலை­யங்கள், கமு/ சது/ வீர­முனை RKM மகா வித்­தி­யா­ல­யத்தில் 1 நிலை­யமும்,  கமு/சது/அஷ்ரப் மத்­திய கல்­லூ­ரியில் 1 நிலை­யமும், கமு/ சது/ நாவி­தன்­வெளி அண்­ணா­மலை மகா வித்­தி­யா­லத்தில் 2 நிலை­யங்­களும் ஆகும்.

மேற்­படி நிலைய மேற்­பார்­வை­யா­ளர்­க­ளி­டமும், இணைப்­பா­ளர்­க­ளு­டனும் இச்­செய்தி பற்றிக் கேட்­ட­போது அவ்­வா­றா­ன­தொரு நிகழ்வு நடக்­க­வில்லை என்­பதை உறு­தி­யுடன் தெரி­விக்­கின்­றனர்.

மேலும், சம்­மாந்­துறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மற்றும் கல்­முனை கல்வி மாவட்டப் பரீட்­சைக்கு பொறுப்­பான பிராந்­திய சேக­ரிப்பு நிலைய அதி­காரி, பிராந்­திய மேற்­பார்­வை­யா­ளர்கள் ஆகி­யோ­ரிடம் இதுபற்றி வின­விய போது இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக எவ்­வித முறைப்­பாடும் இது­வரை எமக்குக் கிடைக்­க­வில்லை என்­ப­தையும் தெளி­வாகத் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வா­றான  போலி­யான செய்­திகள் எமது மாணவ மாண­வி­களின் எதிர்­கா­லத்தை வெகு­வாகப் பாதிக்­கு­மென நம்­பு­கிறோம். பாட­சாலை அதி­பர்கள், பெற்­றோர்கள், சமூக ஆர்­வ­லர்கள் இச்­செய்தி பற்றி தமது விச­னத்தைத் தெரி­வித்­துள்­ளனர்.

இஸ்­லா­மிய மாணவி தனது ஹபா­யா­வுக்குள் புளூ­டுத்தை (Bluetooth) மறைத்து வைத்­துள்­ள­தா­கவும், அதனை சிங்­கள மேல­திக மேற்­பார்­வை­யாளர் கண்­டு­பி­டித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­த­தாகக் கூறப்­படும் செய்­தி­யா­னது இன முறு­கலை ஏற்­ப­டுத்தி இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தைப் பாதிப்­ப­தாக அமை­கின்­றது. ஊட­கங்கள் போலி­யாக இன முறு­கலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஹபா­யாவை கரு­வி­யாகப் பாவிக்­கின்ற கால­கட்­டத்தில் இச்­செய்தி நிரந்­தர அமை­தியை சீர்குலைக்கும் என்று அச்­ச­ம­டை­கின்றோம்.

நேர்­மை­யா­கவும் நியா­ய­மா­கவும் இலங்கை நாடு முழு­வதும் பரீட்­சையை ஒழுங்­கு­ப­டுத்தி நடாத்திக் கொண்­டி­ருக்கும் தங்­க­ளுக்கும் இச்­செய்தி அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் என்­ப­தனால் மேற்­படி இணை­ய­த­ளங்­க­ளுக்கு எதி­ரா­கவும் இச் செய்­தியை ஒலி­ப­ரப்­பிய வானொ­லிக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று தய­வுடன் கேட்­டுக்­கொள்­கிறேன் என அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, இந்த விடயம் தொடர்பில் சம்­மாந்­துறை நம்­பிக்­கை­யாளர் சபை, ஜம்­இய்­யதுல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் அஷ்­ஷூறா ஆகி­யன இணைந்து நேற்று முன்­தினம்  ஊடக அறிக்கை ஒன்றை விடுத்­துள்­ளன.

” சம்­மாந்­து­றையின் கல்வி வளர்ச்­சி­யினை ஏற்றக் கொள்ள முடி­யாத காழ்ப்­பு­ணர்சி கொண்­ட­வர்­களும், முஸ்லிம் சமூ­கத்தை இழிநிலைப்­ப­டுத்த வேண்டும் என்று கங்­கணம் கட்டும் சதி­கா­ரர்­க­ளி­னதும் முயற்­சியே இந்த செய்­தி­யாகும்.

இவ்­வா­றான எவ்­வி­த­மான உண்­மைத்­தன்­மையும் இல்­லாத பொறுப்­பு­ணர்ச்­சி­யற்ற செய்­தி­யினை வெளி­யிட்ட இணை­ய­த­ளங்­க­ளுக்கும், ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கும்  வன்­மை­யான கண்­ட­னத்­தையும் எதிர்ப்­பி­னையும் தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

இவ்­வா­றான போலி­யான செய்­திகள் எமது மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை வெகு­வாகப் பாதிப்ப­துடன், முஸ்லிம் சமூ­கத்­தையும், கலா­சா­ரத்­தி­னையும், முஸ்லிம் பெண்கள் அணியும்  ஹபா­யா­வி­னையும் இழி நிலைப்­ப­டுத்த வேண்டும் என்று கங்­கணம் கட்டும் சதி­கா­ரர்­க­ளி­னதும் முயற்­சி­யாகும்.

இந்த விடயம் தொடர்­பாக சம்­மாந்­துறை வல­யக்­கல்வி அலு­வ­லகம், சம்­மாந்­துறை பொலிஸ் நிலையம் என்­பன இவ்­வா­றான ஒரு நிகழ்வு இடம்­பெ­ற­வில்லை என்று ஊர்­ஜி­தப்­ப­டுத்தும் நிலையில் இவ்­வா­றான பொய்­யான  செய்­தி­களை வெளி­யிட்ட ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணை­யத்­திடம் முறைப்­பாடு செய்து சட்ட நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தா­கவும்  அந்த ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உண்­மையில் இந்த செய்­தி­யா­னது இரண்டு நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எழு­தப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஒன்று, முஸ்லிம் மாண­விகள் அணியும் பர்தா ஆடையைப் பயன்­ப­டுத்தி மோச­டியில் ஈடு­ப­டு­கின்­றனர் எனக் கூறு­வது. அடுத்­தது, இவ்­வா­றான மோச­டிகள் மூல­மா­கவே முஸ்லிம் மாண­விகள் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழகம் நுழை­கி­றார்கள் எனும் அபிப்­பி­ரா­யத்தை தோற்­று­விப்­பது.

முஸ்லிம் சமூ­கத்தின் கலா­சாரம் மீதும் கல்வி எழுச்­சியின் மீதும் காழ்ப்­பு­ணர்ச்சி கொண்ட சக்­தி­களே இவ்­வா­றான திட்­ட­மிட்ட உண்­மைக்குப் புறம்­பான செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை. புற்­றீசல் போல புறப்­பட்­டுள்ள வகை­தொ­கை­யற்ற செய்தி இணை­யத்­த­ளங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. எனினும் இது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் இணையக் குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவும் இணைந்து துரித கெதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் இன்று இனங்களிடையேயும் மதங்களிடையேயும் இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தியே அதிகம் வெறுப்பு விதைக்கப்படுகிறது. ஒருவரையொருவர் தப்பபிப்பிராயம் கொள்ளவும் அதன் மூலம் வன்முறைகளைத் தூண்டவும் இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் காரணமாக அமைந்துவிடுகின்றன.

எனவேதான், அரசாங்கம் இவ்வாறான வதந்திகளைக் கிளப்பிவிடுகின்ற நபர்களுக்கு எதிராகவும் இணையதளங்களுக்கு எதிராகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.

இணையத்தில் வெளியான பொய்யான செய்தி

அம்பாறையில் முஸ்லீம் மாணவியின் திருவிளையாடல்!!

புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார்.

பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

எனினும் ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை.இதனால் பரீட்சை சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதர்.

இப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆண்டு மருத்துவ துறைக்கு 23 மாணவிகள் சிறப்பு சித்தி பெற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Screenshot (580)

Leave a Reply

%d bloggers like this: