என் தாயே

  • 14

பத்து மாதம் உன் கருவறையில் சுமந்து
பட்டுப் போகும் பிரசவ வலி அணுபவித்து
பத்திரமாய் என்னை இப்புவியில்
சங்ஙமிக்க வைத்தாய் என் தாயே!

கலியுலகம் கண்டவுடனே என்
கருவிழிகள் ததும்ப அழுதேன்
மதிமுகமாய் உன் முகம் காட்டி என்னை
மார்போடு அள்ளி அனைத்த என் தாயே!

உன் உதிரம் உரைய உரைய
உன் உயிரும் கரையக் கரைய
உன் உதிரத்தையே எனக்கு
உணவாகப் பாலூட்டினாய் என் தாயே!

உன் உள்ளம் உரைந்து உரைந்து போக
என் மழலை மொழியை இரசிக்கக் கண்டேன்
உன்னுடைய பேச்சுக்கள் எல்லாம்
என் வார்த்தைகளாய் கோர்த்து விட்டாய் என் தாயே!

தாய் வயிறு பசியால் தவிக்க!
சேய் வயிறோ இன்பம் புசிக்க!
உன் வயிற்றில் கல்லைக் கட்டி
உன் பிள்ளைக்கு உணவூட்டினாயா என் தாயே!

என் சிரிப்பில் இன்பம் கண்டாய்
உன் துன்பங்கள் தானாய் மறந்தாய்
என் துன்பங்களைக் கூட நீ துடைக்க
உன் புன்முறுவலை எனக்கு பரிசளித்து விட்டாயே தாயே!

என்னில் தலைதூக்குகிறது உன் வலி
கலங்கி ஆறாய் ஓடுகிறது என் விழி
வலிகளை எல்லாம் வரங்களாய்
ஏற்றுக் கொண்டாயே என் தாயே!

தியாகங்களையே அன்று உன்
முகவுரையாகக் கொண்டு – என்
திருவுடலுக்கு முகவரி தந்தாய் என் தாயே!

இன்று தியாகியாக நீ சென்று
தனியாக தரிசனம் பெறுகிறாய் நீயே
நானும் உன்னுடன் வர நினைக்கிறேன்
என்னையும் தியாகியாக ஏற்பாயா? என் தாயே

H.F.Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

பத்து மாதம் உன் கருவறையில் சுமந்து பட்டுப் போகும் பிரசவ வலி அணுபவித்து பத்திரமாய் என்னை இப்புவியில் சங்ஙமிக்க வைத்தாய் என் தாயே! கலியுலகம் கண்டவுடனே என் கருவிழிகள் ததும்ப அழுதேன் மதிமுகமாய் உன்…

பத்து மாதம் உன் கருவறையில் சுமந்து பட்டுப் போகும் பிரசவ வலி அணுபவித்து பத்திரமாய் என்னை இப்புவியில் சங்ஙமிக்க வைத்தாய் என் தாயே! கலியுலகம் கண்டவுடனே என் கருவிழிகள் ததும்ப அழுதேன் மதிமுகமாய் உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *