தொழிலில்லா முதலாளி

  • 11

ஆழ்கடலின் ஆழம் தொட்டு
கழிவறைக் காற்றை நுகர்ந்து
ஊர் தாண்டிப் பறக்கும்
ஆத்மார்த்தமான ஆன்மாவின் அழறல்

விக்கித் தடுமாறி
திசை பிரண்டு ஓடும்
ஊர்க் கைதியின் டயரியின் பக்கங்கள்
புண்ணால் அச்சிடப்பட்டு

ஆறாத வடுக்களும்
அவ்வப்போது வற்றாத கண்ணீரும்
அவன் இதயத்தை செல்லறித்துச் செல்லும்
வழக்கமாகிப் போன புதிர்

மழைச் சாரல்கள் தாலமிடும்
சப்தத்தில் புத்தகம் விரித்து
பூமியின் புன்னகையில்
மேகத்தின் கண்ணீருக்கு இரையானவன்

பட்சிகளின் அடர் வனத்தில்
சுயம் தொலைத்து காப்பக குழந்தை போல்
வினா தொடுத்து விடை தேடும்
குறுகுறுத்த மனதின் காயக்காரன்

அவன் வேலையில்லா பட்டதாரி
தொழிலில்லா முதலாளி
புத்தியுள்ள முட்டாள்
சுதந்திரமான ஆயுள் கைதி

ஏரூர் நிலாத்தோழி

ஆழ்கடலின் ஆழம் தொட்டு கழிவறைக் காற்றை நுகர்ந்து ஊர் தாண்டிப் பறக்கும் ஆத்மார்த்தமான ஆன்மாவின் அழறல் விக்கித் தடுமாறி திசை பிரண்டு ஓடும் ஊர்க் கைதியின் டயரியின் பக்கங்கள் புண்ணால் அச்சிடப்பட்டு ஆறாத வடுக்களும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *