புதிய நோய்கள் சமூகத்தில் ஏற்படுவதற்கான காரணிகள்!

  • 8

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கும் பெரியதொரு ஹதீஸில் கீழ்வரும் முதற் பகுதியை மாத்திரம் இங்கு நோக்குவது பயனுடையதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு சமுதாயம் விபச்சாரத்தை பகிரங்கமாக அறிவிப்புசெய்து நடத்துமளவு, விபச்சாரம் அதிகரிக்குமாயின், முன்னைய சமூகத்தில் காணப்படாத புதிய (கொடூர) நோய்கள் மற்றும் கொலரா போன்ற தொற்றுநோய்கள் பரவ ஆரம்பிக்கும்.”

இந்த ஹதீஸ் இப்னு மாஜா, தபரானீ,ஹாகிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றாலும் இதன் தரத்தில் அறிஞர்களுகிடையில் கருத்துவேறுபாடு உண்டு. அதிகமாக முஹத்திஸ்கள் இதனை பலவீனமான ஹதீஸாக நோக்கும் அதேவேளை இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹஸன் தரத்தில் நோக்குகிறார்கள்.

எது எவ்வாறாக இருப்பினும் விபச்சாரம் போன்ற பெரும்பாவங்கள் பரவலாக காணப்படும் சந்தர்ப்பத்தில் அச்சமுதாயத்தில் முன்னர் கேள்விப்படாத புதிய நோய்கள் தலைவிரித்தாடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆதலால் இணைவைப்பு, வட்டி, விபச்சாரம், சூனியம், கொலை செய்தல், அநாதைகளது சொத்தை உண்ணுதல், பத்தினி பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் போன்ற இன்னோரன்ன பெரும்பாவங்களாக இஸ்லாம் அடையாளமிட்டுள்ளவற்றை முற்றாக தவிர்த்து, நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுத்து சமுதாயத்தை அழிவிலிருந்து பாதுகாப்போம்.

நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கும் பெரியதொரு ஹதீஸில் கீழ்வரும் முதற் பகுதியை மாத்திரம் இங்கு நோக்குவது பயனுடையதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு சமுதாயம் விபச்சாரத்தை பகிரங்கமாக…

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கும் பெரியதொரு ஹதீஸில் கீழ்வரும் முதற் பகுதியை மாத்திரம் இங்கு நோக்குவது பயனுடையதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு சமுதாயம் விபச்சாரத்தை பகிரங்கமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *