அல் குர்ஆனில் மயிர் தேடும் சமூகம்

  • 6

அல் குர்ஆனில் மயிர் தேடி மகத்தான இறை வேதத்தை இழிவுபடுத்தும் மூடர்களே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அப்படி அல் குர்ஆனில் மயிர் இருந்தாலும் அது நிச்சயமாக இறைவனின் புறத்தில் இருந்தது வந்தது அல்ல. மாறாக ஷைத்தான் உங்களை வழிகெடுக்கிறான். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களை வழிகேட்டில் ஆழ்த்தும் கெட்ட தந்திரக் காரன் அவன். எனவே மதி மயங்காதீர்கள். இது குறைமதியால் வந்த குழப்பம். ஒரு வரலாற்றுச் சம்பவத்தை கூறுகிறேன் கேளுங்கள் :

உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பைத்துல் முகத்திஸ் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு ஹிஜ்ரி பதினெட்டாம் ஆண்டு ஒரு தொற்று நோய் ஷாம் பிரதேசத்தில் (இன்றைய சிரியா, ஜோர்தான், பாலஸ்தீனம், லெபனான் பகுதியில்) கடுமையாக பரவி கிட்டத்தட்ட இருபத்து ஐயாயிரம் முஸ்லிம்கள் அதில் மரணித்தார்கள். இது நபித் தோழர்கள் காலப்பகுதி என்பதால் மரணித்தவர்கள் அனைவரும் நபித் தோழர்களும் மற்றும் அவர்களை பின் துயர்ந்தவர்களும் (தாபிஈன்கள்) என்பதும் வெளிப்படை.

முஆத் இப்னு ஜபல், அபூஉபைதா, பழ்ல் இப்னு அப்பாஸ் போன்ற சிரேஷ்டமான ஸஹாபாக்களும் கூட இந்த கொள்ளை நோயினால் மரணித்தார்கள். இவ்வளவு தீவிரமாக இந்த நோய் பரவிய பொழுதுகளில் இறை நம்பிக்கையில் உச்சம் தொட்ட நபித் தோழர்கள் அதனை பெளதீக ரீதியாக எதிர்கொள்ளவே முயற்சி செய்தார்களே தவிர யாரும் அல் குர்ஆனில் மஷிறு தேடவில்லை (மகா உன்னதான இறைவன் எம்மை மன்னிக்கட்டும்).

கொரோனா வைரஸ் ஒரு மானுட நெருக்கடி. இயற்கை பேரிடர். நிச்சயமாக மானுட குலம் இதிலிருந்து இறைவனின் அருளால் மீண்டெழும். அப்படி மீண்டெழ முடியாவிட்டாலும் கூட இறைவனின் வேதம் மகா உன்னதமானது. அதன் மகத்துவத்தை இழிவுபடுத்தாமல் பொறுமை காப்போம். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.!

Lafees Shaheed

அல் குர்ஆனில் மயிர் தேடி மகத்தான இறை வேதத்தை இழிவுபடுத்தும் மூடர்களே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அப்படி அல் குர்ஆனில் மயிர் இருந்தாலும் அது நிச்சயமாக இறைவனின் புறத்தில் இருந்தது வந்தது அல்ல.…

அல் குர்ஆனில் மயிர் தேடி மகத்தான இறை வேதத்தை இழிவுபடுத்தும் மூடர்களே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அப்படி அல் குர்ஆனில் மயிர் இருந்தாலும் அது நிச்சயமாக இறைவனின் புறத்தில் இருந்தது வந்தது அல்ல.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *