ஜமாஅத் தொழுகை தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு

  • 9

ஜமாஅத் தொழுகையின் சட்ட நிலைப்பாடு தொடர்பாக இமாம்களிடத்திலே நான்கு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மையில் இது அடிப்படையில் இரு கருத்துக்களாகத்தான் காணப்படுகின்றன.

இமாம் அஹமத் இப்னு ஹன்பல் மற்றும் ஹனபி மத்ஹபின் பொதுவான கருத்தும் ஜமாஅத் தொழுகை வாஜிபாகும் என்பதாகும். ஆனால், தொழுகை அங்கீகரிக்கப்படுவதற்கான ஷரத்தாக அவர்கள் இதனைக் கருதவில்லை. அந்தக் கருத்தை ழாஹிரீக்கள்தான் கொண்டிருக்கின்றனர்.

ழாஹிரி மத்ஹப் சார்ந்த தாஊத் அழ்ழாஹிரி, இமாம் இப்னு ஹஸ்ம் போன்றோர் ஜமாஅத் தொழுகையை கட்டாயக் கடமையாகக் கருதுகின்றனர். அதாவது ஜமாத் தொழுகையை தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஒரு ஷரத்தாக அவர்கள் கருதுகினறனர். ஜமாஅத்தாக தொழாது விட்டால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற கருத்தை இவர்கள் கொண்டிருந்தனர்.

இமாம் ஷாபிஈ, மாலிக், ஹனபி மத்ஹபில் ஒரு சாராரினதும் கருத்து ஜமாஅத் தொழுகை ஸுன்னா முஅக்கதா என்பதாகும்.
இதில் ஷாபிஈ மத்ஹபின் இரண்டாவது கருத்தாக ஜமாஅத் தொழுகை பர்ளு கிபாயாவாக நோக்கப்படத்தக்கது என்பதாகும் இதனை இமாம் நவவி அவர்கள்,

قال النووي: “صلاة الجماعة هي في الفرائض غيرالجمعة سنة مؤكدة ٬ وقيل: فرض كفاية للرجال ٬ فتجب بحيث يظهر الشعار في القرية “

“பர்ழான தொழுகைகளுள் ஜுமுஆ தொழுகையை தவிர ஏனைய தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவது ஸுன்னா முஅக்கதாவாகும். இது ஆண்களைப் பொருத்தவரை பர்ழு கிபாயா எனப்படுகிறது. அதாவது ஒரு பிரதேசத்தில் தொழுகை என்ற கிரியை பொதுவான தோற்றப்பாடாகக் காணப்பட வேண்டும்.” என விளக்குகிறார்கள்.

இதில் ஜும்ஹுர்களது கருத்து, பர்ழான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவது ஸுன்னா முஅக்கதா என்பதாகும். இதில் ஜும்ஹுர்கள் கிட்டத்தட்ட இஜ்மாவான கருத்துக்கு வருகின்றனர் என இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் தனது பிதாயதுல் முஜ்தஹிதில் குறிப்பிடுகிறார்.

இந்தக் கருத்துக்களை இவ்விடயத்தில் நாம் எப்படி அனுக வேண்டும் என்பதனை இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

وسبب اختلاف الفقهاء هو تعارض مفهوم الآثار في تلك المسألة، وذلك كما يقول ابن رشد(1) إن ظاهر قوله صلى الله عليه وسلم : (صلاة الجماعة تفضل صلاة الفذ بخمس وعشرين درجةً، أو بسبع وعشرين درجةً) يعني أن الصلاة في الجماعة من جنس المندوب إليه وكأنها كمال زائد على الصلاة الواجبة؛ فكأنه صلى الله عليه وسلم قال: صلاة الجماعة أكمل من صلاة المنفرد، والكمال إنما هو شيء زائد على الإجزاء.
فمن قال: إن الجماعة سنة مؤكدة أخذ بهذا الحديث واستدل به بهذا المفهوم.
وأما من قال: إن الجماعة واجبة فقد اعتمد على أدلة أخرى، منها حديث تحريق بيوت الذين يتخلفون عن الجماعة، وحديث الأعمى الذي استأذن النبي صلى الله عليه وسلم وطلب أن يرخص له في عدم حضور الجماعة لأنه يجد مشقةً في ذلك فلم يرخص له. وعلى ذلك فقد سلك كل واحد من الفريقين مسلك الجمع بين الأحاديث بتأويل حديث مخالفه وصرفه إلى الظاهر الذي تمسك به. وهذا هو تفصيل المذاهب في تلك المسألة.

இங்கு இமாம்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதற்கான காரணம் குறித்த இந்த விடயத்தில் வந்துள்ள ஹதீஸ்களை விளங்கிக் கொள்வதில் காணப்படுகின்ற வேறுபாடுகளாகும். ஜமாஅத் தொழுகையின் சிறப்புக்கள் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை வைத்து, அதனை பர்ளான தொழுகைளை முழுமைப்படுத்தும் விடயமாக ஸுன்னா முஅக்கதா என்போர் பாரத்தனர்.

வாஜிப் என்போர், தொழுகைக்காக பிந்துவோரின் வீடுகளை எரிப்பது சம்மந்தமாகவும் குருடருக்கு ஜமாஅத்துக்கு வராதிருக்க அனுமதி மறுக்கப்பட்ட ஹதீஸையும் வைத்து தமது கருத்தை நிறுவுகின்றனர். இங்கு இரு சாராரும் தாம் கொண்ட கருத்தை மற்றைய சாராரின் ஆதாரங்களுக்கு விளக்கம் சொல்வதன் ஊடாக நிறுவுகின்றனர்.

உண்மையில் இந்த விடயத்தில் ஜும்ஹுர்களது நிலைப்பாடே, ஜமாஅத் தொழுகையின் பிரதான நோக்கமான தொழுகை எனும் கிரியை சமூக மட்டத்தில் இல்லாது போகாமல் பேணுதல் என்ற விடயத்துடன் உடன்பட்டு வருகிறது என்பதனைக் காணமுடியும்.

ஜமாஅத் தொழுகை சம்மந்தமாக எம்மிடம் இருக்கின்ற உரையாடல்கள், இது தொடர்பாக மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற போதுதான் அழகான விளைவைத் தரும். இல்லாத போது அது உபதேசிகளின் உபதேசமாக மாத்திரம் இருந்துவிட்டுப் போகும். அது நடத்தை மாற்றத்தை நோக்கிய உரையாடலாக மாறமாட்டாது.

ஜமாஅத் தொழுகையை நாம் எமக்குள்ளால் பயிற்றுவிப்பதில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என்பது தொடர்பாக கலாநிதி ஜாஸிர் அவ்தாவிடம் பெற்ற ஒரு ஆலோசனையை பகிர்து கொள்கிறோம்.


‘صلاة الجماعة في المسجد سنة وهو ما يعني أن يثاب فاعلها ولا يعاقب تاركها. أما الضغط على الشباب من باب التربية فأرى أن النصح والرفق هما أيضا من السنن المؤكدة وهما أولى وأنجح لأن هذا ما فعله رسول الله صلى الله عليه وسلم. تحياتي ‘

“பள்ளிவாயிலில் ஜமாஅத்தாக தொழுதல் ஸுன்னாவாகும். இதன் கருத்து, அதனை நிறைவேற்றியவர் கூலி பெறுவார். அதனை விடுபவர் தண்டிக்கப்படமாட்டார். இந்த விடயத்தில் பயிற்றுவித்தல் நோக்கில் இளைஞர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைப் பொருத்தவரை, இதில் மென்மையாக நடப்பதும், உபதேசம் செயவதும் கூட ஸுன்னா முஅக்கதாவாகக் காணப்படுகிறது. அவை இரண்டும் இந்த விடயத்தில் முதன்மைப்படுத்தப்பட வேண்டியவையாகவும், வெற்றிகரமானதுமான வழிமுறையாகவும் காணப்படுகிறது. இதுதான் நபியவர்களது வழிமுறையும் கூட.”

حديث إحراق البيوت لابد أن ننظر فيه إلى قصد النبي صلي الله عليه وسلم فيه. هو لم يقصد أن يعاقب فعلاً بالحرق ولم يفعلها أبدا وإلا أصبحت الصلاة العادية في المسجد فرضاً وهو ما لم يقل به أحد. بل هو قصد التأديب والحث بكلام عربي يفهم السامع منه حرصه وجديته وليس فعلا أن يحرق البيوت على أحد. هذا الحديث مثل حديث أن يقلب الله رأس المصلي لرأس حمار إذا رفع قبل الإمام، أو غيرها من الأحاديث. وصلاة الجماعة في غير الجمعة سنة أي يثاب فاعلها ولا يعاقب تاركها، ولكن لا ينبغي أن يترك المصلي الجماعة دائما أبداً لأن هذا يخالف السنة وفي هذا جاء الحديث. والله أعلم. وفقك الله

“ஜமாஅத் தொழுகை தொடர்பில் வந்துள்ள வீட்டை எரித்தல் சம்மந்தமான ஹதீஸைப் பொருத்தவரை அதன் நோக்கத்தை நாம் பார்க்க வேண்டும். நபியவர்கள் இங்கு எரிப்பதை நோக்கமாகக் கொள்ளவுமில்லை, அதனை ஒரு போதும் நடைமுறைப்படுத்தவுமில்லை.
அப்படியில்லாது போனால் அன்றாடம் அனைத்து தொழுகைகளையும் பள்ளிவாயிலில் தெழுவது பர்ளாக மாறியிருக்கும். இப்படி யாருமே கூறவில்லை. இந்த ஹதீஸ், இங்கு பண்படுத்தும், தூண்டும் நோக்கோடு கூறப்பட்டதாகும். அறபு மொழியில் இப்படி சொன்னால் விடயம் பாரதூரமானது என்பதனை கேட்பவர் விளங்கிக் கொள்வர். மாற்றமாக யாருடையதாவது வீட்டை எரிக்கப் போகிறார் என இங்கு புரியப்படமாட்டாது. இது இமாமுக்கு முன்னர் எழும்புபவரின் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவதாக வந்த ஹதீஸ் போன்றது. ஜுமுஆ தொழுகை தவிர்ந்த அனைத்து தெழுகைகளும் ஜமாஅத்தாக தொழப்படுவது ஸுன்னாவாகும். அதாவது செய்பவர் நன்மை பெறுவார். செய்யாதவர் தண்டிக்கப்படமாட்டார். என்றாலும் ஒரு தொழுகையாளி தொடர்ச்சியாக ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. அது சுன்னாவுக்கு முரணாகும். இது தொடர்பில் ஹதீஸ்கள் வந்துள்ளன.”


இன்றைய சூழலில் ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள பத்வாவை புரிந்து கொள்ள இது உதவும். (தொழுகையை பயிற்றுவித்தல் தொடர்பாக 2016களில் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து…)

எம்.என்.இக்ராம் (M.Ed)

ஜமாஅத் தொழுகையின் சட்ட நிலைப்பாடு தொடர்பாக இமாம்களிடத்திலே நான்கு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மையில் இது அடிப்படையில் இரு கருத்துக்களாகத்தான் காணப்படுகின்றன. இமாம் அஹமத் இப்னு ஹன்பல் மற்றும் ஹனபி மத்ஹபின் பொதுவான கருத்தும்…

ஜமாஅத் தொழுகையின் சட்ட நிலைப்பாடு தொடர்பாக இமாம்களிடத்திலே நான்கு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மையில் இது அடிப்படையில் இரு கருத்துக்களாகத்தான் காணப்படுகின்றன. இமாம் அஹமத் இப்னு ஹன்பல் மற்றும் ஹனபி மத்ஹபின் பொதுவான கருத்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *