எந்த நாளும் கொரோனா வந்த ஜாதி

  • 26

ஷமீலா முன்பள்ளியில் கல்வி கற்கும் சின்னஞ்சிறு சிட்டு. அன்று மாலை 6:00 மணியுடன் வீட்டை அடைந்த தந்தையைக் கண்டதும் மகிழ்சி தாங்க முடியவில்லை. அவளது மகிழ்ச்சிக்கும் காரணம் இருக்கத்தான் செய்தது.

அவள் தந்தையை அறிந்த காலத்திலிருந்தே தந்தையுடன் பொழுதைக் கழிப்பதற்கே விரும்பினாள். எனினும் தந்தையோ ஷமீலா காலையில் எழும்புவதற்கு முன்பே தொழிலுக்கு சென்று விடுகிறாள். இரவானதும் தந்தை வரும் வரையில் காத்திருப்பாள். இரவில் தாயிடம்¸

“உம்மா வாப்பா எப்ப வருவாங்க… நா வாப்பாவோட பேசனும் விளையாடனும்”

என மழலையில் கேட்பாள். ஆனால் தந்தை வரும்வரை விழித்திருக்கும் சக்தி ஷமீலாவிடமில்லை. தூக்கம் அவளை அணைக்க இரவு 9:00 மணியுடன் தூங்கி விடுவாள். காலையில் எழும்பி தந்தையை தேடினால் தந்தைக்கு பதிலாக கிடைப்பதோ சொக்லேட் மாத்திரமே. அவள் எதிர்பார்த்தது சொக்லேட்டை விட தந்தையின் அன்பையே. இவ்வளவு நாளாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தந்தை இன்று நேரகாலத்துடன் வீட்டை அடைந்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

ஒடோடி சென்று தந்தையை முத்தமிட்டாள. தந்தை கொண்டு வந்திருந்த தந்தைக்கும் தாய்க்கும் ஊட்டியும் விட்டாள். இரவு உணவைக்கூட ஒரு சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதும் அன்றுதான் முதற் தடைவ அவளுக்கு அது புதுமையாகவும் இன்பமாகவும் இருந்தது. இரவு படுக்கைக்குச் செல்லும்போது தாயிடம்¸

“உம்மா¸ வாப்பா நாளக்கி வேலக்கி போறா? இன்டக்கித்தான் நேரத்தோட ஊட்டுக்கு வந்திருக்கு¸ நாளக்கி வேலக்கு போகவாணம் என்டு சொல்லுகளே”

“இல்ல மகள்! மூனு நாளக்கி வாப்பாக்கு லீவு ஊட்டுலதான் நிக்கியொன்டு”

“மூனு நாள் லீவா…! ஒரு நாள் கூட பகலக்கி வாப்பா நிக்கியல்லே.. ஷா.. எனக்கு நல்ல விளையாடேலும்” என துள்ளிக் குதித்தாள்.

“ஏனும்மா மூனு நாள் லீவு” புரியாமல் கேட்டாள்.

“கொரோனா தொற்று நோய் வராமல் இருக்கவே லீவு கடயேல்லாம் மூடி எல்லாரும் வீட்டுலதான் நிற்கனும். பக்கத்திலுள்ள பள்ளிக்கும் போக ஏல” என்று தாய் புரிய வைத்தாள்.

அவளோ சந்தோஷத்துடன்¸

“எந்த நாளும் கொரோனா வந்த ஜாதி¸ வப்பா எந்த நாளும் ஊட்டுல எந்த நாளும் ஜொலி”

என மழலைக் குரலில் மொழிந்தாள். தாய்க்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

Banucaseem

ஷமீலா முன்பள்ளியில் கல்வி கற்கும் சின்னஞ்சிறு சிட்டு. அன்று மாலை 6:00 மணியுடன் வீட்டை அடைந்த தந்தையைக் கண்டதும் மகிழ்சி தாங்க முடியவில்லை. அவளது மகிழ்ச்சிக்கும் காரணம் இருக்கத்தான் செய்தது. அவள் தந்தையை அறிந்த…

ஷமீலா முன்பள்ளியில் கல்வி கற்கும் சின்னஞ்சிறு சிட்டு. அன்று மாலை 6:00 மணியுடன் வீட்டை அடைந்த தந்தையைக் கண்டதும் மகிழ்சி தாங்க முடியவில்லை. அவளது மகிழ்ச்சிக்கும் காரணம் இருக்கத்தான் செய்தது. அவள் தந்தையை அறிந்த…

3 thoughts on “எந்த நாளும் கொரோனா வந்த ஜாதி

  1. Hi there! Do you know if they make any plugins to safeguard against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any suggestions?

  2. It’s a shame you don’t have a donate button! I’d most certainly donate to this superb blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to brand new updates and will talk about this blog with my Facebook group. Chat soon!

  3. I liked up to you’ll receive performed right here. The cartoon is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an edginess over that you want be turning in the following. sick definitely come further in the past once more as precisely the same just about very often inside case you protect this increase.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *