றமழான் விடுமுறையை இல்லாமல் செய்வது குறித்து

  • 12

இந்த வகையாக சிந்திப்பது ஒரு வகையான மனவியாதி என்றுதான் கூற வேண்டும். பல்வகைமையின் பிரயோசனத்தை விளங்காமல் எல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என சிந்திக்கும் தீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடுகளிற்கான எதிர்வினைதான் இத்தகைய சிந்திப்பு.

கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டுப்பட்டதல்ல. அது நூல்களுடன், பாடத் திட்டங்களுடன் மட்டுப்பட்டதல்ல. முறைசார் கல்வி முறையில் அதிக பயன்கள் இருந்தாலும் அது தொடர்பான பல விமர்சனங்களும் கல்வியலாளலர்களிடம் உண்டு. இதனால்தான் இன்று உலக அளவில் மாற்று கல்வி முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

பரீட்சையின் சித்தி மாத்திரமல்ல கல்வியின் அடைவு. அது கல்வி அடைவை அளவிடுவதற்கான மிகவும் பலவீனமான கருவியாக இன்று அடையாளப்படுத்தப்படுகிறது. செயற்திட்ட முறை (ஒன்றை செய்து காண்பித்தல்) இன்று சிறந்த மதிப்பீட்டுக் கருவியாக பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, எமக்கு பிள்ளைகளிற்கு சுதந்திரமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கு, எமது பாடசாலைக் கல்விமுறையில் நளிவடைந்து போயுள்ள ஆன்மீக, ஒழுக்க விடயங்களை கற்பிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள இந்த றமழான் விடுமுறையை நீக்குவது குறித்து சிந்திப்பது பொருத்தமற்றதாகும். அந்த விடுமுறையை அழகாக பயன்படுத்துவதற்கான திட்டமிடல்கள் குறித்தே சிந்திக்க வேண்டும். அது இன்னொரு பாடசாலையாக அமையக் கூடாது. அது மாணவர்களின் வாழ்வாற்றலை வளர்ப்பதாக அமைய வேண்டும்.

இது குறித்து முஸ்லிம் கலாச்சார திணைக்களத்துடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கலாம். இதனை விட்டு விட்டு எமது பிள்ளைகளுக்கு வாழ்வை கற்பிப்பதற்காக எமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பை கல்வி குறித்த எமது அறியாமையால் தாரை வார்க்க நினைப்பது அறிவீனமாகும்.

எம்.என்.இக்ராம் (M.Ed)

இந்த வகையாக சிந்திப்பது ஒரு வகையான மனவியாதி என்றுதான் கூற வேண்டும். பல்வகைமையின் பிரயோசனத்தை விளங்காமல் எல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என சிந்திக்கும் தீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடுகளிற்கான எதிர்வினைதான் இத்தகைய சிந்திப்பு. கல்வி…

இந்த வகையாக சிந்திப்பது ஒரு வகையான மனவியாதி என்றுதான் கூற வேண்டும். பல்வகைமையின் பிரயோசனத்தை விளங்காமல் எல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என சிந்திக்கும் தீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடுகளிற்கான எதிர்வினைதான் இத்தகைய சிந்திப்பு. கல்வி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *