பிராத்தனையும் செய்வோம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்!

  • 8
  1. ஸதகா செய்தல்
  2. தஸ்பீக் செய்தல்
  3. இஸ்திக்பார்/தௌபா செய்தல்
  4. பெரும்பாவங்களை முற்றாக தவிர்த்தல்
  5. பிரார்த்தனை செய்தல்
  6. சுகாதார ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் .

என்பவற்றை தற்போதைய சூழலில் கடைப்பிடிப்பது நன்று

செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
  1. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களைத் தவிர்த்தல்.
  2. முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வெளியில் (கொண்டு) செல்வதை முற்றாக தவிர்த்தல்.
  3. போதிய பணமிருப்பின் வீட்டுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை இயன்றளவு கொள்வனவு செய்து சேமித்து வைத்தல்.
  4. செல்வந்தர்கள் இக்காலகட்டத்தில் தொழிலுக்கு செல்ல முடியாத அன்றாட கூலித் தொழிலாளிகள் மற்றும் வறுமைப்பட்டோருக்கு இயன்றளவு உதவி செய்தல்.
  5. வெளியில் சென்று வீட்டுக்குள் வருபவர்கள் தமது கை, கால்களை சவர்க்காரமிட்டு கழுவி சுத்தம் செய்தல்/
  6. கிருமிகளது தாக்கத்தை கட்டுப்படுத்தும் வண்ணம் ஆடைகளை நன்றாக உலர (காய) வைத்து அணிதல்.
  7. நீர்த்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதுடன் உடலை இயன்றளவு ஈரளிப்புக் கொண்டதாக வைத்திருத்தல்.
  8. அடிக்கடி சுத்தங்களை பேணுதல்
  9. தொடுகைகளை (கைலாகு கொடுத்தல், ஆரத்தழுவுதல்) தவிர்த்தல்

போன்றவற்றையும் அவதானத்துடன் கடைப்பிடிப்பதானது எம்மை நாம் பாதுகாப்பதுடன் சூழவுள்ள ஏனையோரையும் பாதுகாக்க வழிவகுக்கும். இதனை வாசிக்க முடியுமானவர்கள் வாசித்து விளங்கி அமுல்படுத்துவதுடன், வாசிக்கத் தெரியாத அல்லது முகநூல் பாவனையற்றவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு செய்து அனைவரையும் கொடிய கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்போம். ஆன்மிகம் மற்றும் லௌகீக வழிகாட்டல்களை வாழ்வில் எடுத்து செயற்படுத்துவோம்.

اللهم ادفع عنا البلاء والوباء وفيروس كورونا وقنا من كل شر والفتن والآفات السماوية

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா

ஸதகா செய்தல் தஸ்பீக் செய்தல் இஸ்திக்பார்/தௌபா செய்தல் பெரும்பாவங்களை முற்றாக தவிர்த்தல் பிரார்த்தனை செய்தல் சுகாதார ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் . என்பவற்றை தற்போதைய சூழலில் கடைப்பிடிப்பது நன்று செய்ய வேண்டிய பாதுகாப்பு…

ஸதகா செய்தல் தஸ்பீக் செய்தல் இஸ்திக்பார்/தௌபா செய்தல் பெரும்பாவங்களை முற்றாக தவிர்த்தல் பிரார்த்தனை செய்தல் சுகாதார ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் . என்பவற்றை தற்போதைய சூழலில் கடைப்பிடிப்பது நன்று செய்ய வேண்டிய பாதுகாப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *