பெற்றோர்களே! குழந்தைகளிடம் பாகுபாடு காட்டவேண்டாம்

  • 9

இன்று அதிகமான பெற்றோர்கள் விடும் தவறுகளில் மிகப்பயங்கரமான ஒன்றே பிள்ளைகளுக்கு மத்தியில் பாகுபாடு காட்டுவதாகும். இதனை சர்வசாதாரணமாக காணக்கூடியதைப்பார்க்கலாம்.

பொதுவாக எல்லா பெற்றோர்களுமே பிள்ளைகளிடம் பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பாசத்தை பொழிவதில் அவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. சில பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து அந்நியமாகிவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். ‘எவ்வளவோ பாசத்தை கொட்டினாலும் என் குழந்தை என்னிடம் நெருங்கி பழகுவதில்லை’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள்.

அதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்க்க வேண்டும். குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பதாலோ, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதாலோ மட்டும் பாசமான பெற்றோர்களாகிவிட முடியாது. பெற்றோர் மட்டும் ஒருதலைப்பட்சமாக அன்பை பொழிவதில் அர்த்தமில்லை.

நீ தான் எனக்குப் பிடித்தவன். நீ தான் அறிவாளி. அவன் முட்டாள் என்பதைப் போன்ற ஏற்றத்தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளை குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். அறி : ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்), நூல் : புகாரி (2587)

அதேபோல் தங்களுடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு முன்பாகவே, ‘அது உனக்கு சரிப்பட்டு வராது. நீ செய்யும் காரியம் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கறாராக பேசி அவர்கள் மனதை நோகடித்துவிடக்கூடாது. அவர்களின் செயல்பாடுகள் தவறானதாக இருந்தால் பக்குவமாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.

அதேபோல் எந்த வயதினரிடமும் அன்புடன் பழகுவதற்கு பாகுபாடு காண்பிக்கக்கூடாது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் மனம் விட்டு விவாதிப்பதை பழக்கமாக்கிக்கொண்டால் அவர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிடும். அவர்கள் தவறான முடிவுகள் எடுப்பது தவிர்க்கப்பட்டு விடும். எதுவாக இருந்தாலும் நன்கு ஆலோசித்து சுயமாக இறுதி முடிவு எடுக்கும் பக்குவம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

எனவே அல்லாஹ் தந்த மிகப்பெறும் அருட்கொடையான குழந்தைகளை நாங்களே எமக்கான சோதனைகளாக ஆக்கிக்கொள்ளாமல் பாதுகாப்போம்.

Faslan hashim
SEUSL
BA ®

இன்று அதிகமான பெற்றோர்கள் விடும் தவறுகளில் மிகப்பயங்கரமான ஒன்றே பிள்ளைகளுக்கு மத்தியில் பாகுபாடு காட்டுவதாகும். இதனை சர்வசாதாரணமாக காணக்கூடியதைப்பார்க்கலாம். பொதுவாக எல்லா பெற்றோர்களுமே பிள்ளைகளிடம் பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பாசத்தை பொழிவதில் அவர்கள் கடைப்பிடிக்கும்…

இன்று அதிகமான பெற்றோர்கள் விடும் தவறுகளில் மிகப்பயங்கரமான ஒன்றே பிள்ளைகளுக்கு மத்தியில் பாகுபாடு காட்டுவதாகும். இதனை சர்வசாதாரணமாக காணக்கூடியதைப்பார்க்கலாம். பொதுவாக எல்லா பெற்றோர்களுமே பிள்ளைகளிடம் பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பாசத்தை பொழிவதில் அவர்கள் கடைப்பிடிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *