எதற்கிந்தத் தண்டணை

  • 6

தன் பால் சுரந்து
தன் தூக்கமிழந்து
தாலாட்டி உன்னை வளர்த்துவிட்டது
எதிரில் நின்று
எட்டி உதைத்திடத்தானா

தாயவள் மூதாட்டி என்று
தள்ளிவிட்டாயோ
நாளை உன் பிள்ளை
உன்னை உதைத்து விடமாட்டானா

அவள் இரத்தம் உன்னோடு
உன் இரத்தம் உன் பிள்ளையோடு
இளவயதில் உள்ளதால்
முதுமை உன் மூக்கைப் பிடிக்க வைக்கிறதோ

தாயை ஒதுக்கி விடாதே
நெருப்புமழை பூமிக்கி இறங்கிவிடும்
மனிதம் இழந்த மனிதனே
மண்ணில் உள்ள தெய்வம் இவளடா
அவள் மடியினில் தவழ்ந்த
நாட்களை என்னித்தான் கொஞ்சம் பாரடா
இந்தப் பாரே அவள் போட்ட பிச்சைதானடா

பஞ்சம் இருந்தும் பட்டனி போட்டாளா உன்னை
பசி போக்கிட மறந்தாளா உனக்கு
பாசம் என்றதை உணர்த்திடாததற்காகவா
இந்தத் தண்டணை இல்லை
உயிர் பிரியும் வரை தஞ்சம் கேட்கிறாள்
என்றுதானா இந்தத் தண்டணை

இறக்கம் இழந்தவனே
இந்தக் கண்ணீரால்
அந்தக் கடவுளிடம் இருந்து
நெருக்கம் இழந்துவிட்டாயடா

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை – 08

தன் பால் சுரந்து தன் தூக்கமிழந்து தாலாட்டி உன்னை வளர்த்துவிட்டது எதிரில் நின்று எட்டி உதைத்திடத்தானா தாயவள் மூதாட்டி என்று தள்ளிவிட்டாயோ நாளை உன் பிள்ளை உன்னை உதைத்து விடமாட்டானா அவள் இரத்தம் உன்னோடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *