மாதரே!

  • 42

பெண்மையின் வெள்ளோட்டத்தில்
கரை சேர்ந்த மாதரே!
அணை திரந்து வாருங்கள்
அலைகள் எல்லாம் மீண்டும்
கடலையே சேரும் கரையை அல்ல!

அலை மோதும் துன்பங்களையும்
அவளின் கண்ணீர் தண்ணீர் ஆக்கும்
வேறூண்டும் வேதனை கூட
அவளது புன்னகையிலே பூவாகும்!
புரிகிறதா மாதரே!

ஒழுக்கம் எனும் உடையை உடுத்தி
தனக்கென ஒரு ஆண்மகனை உரித்தாக்குவாள்!
ஒழுக்க சீலனாய் தனது செல்வங்கள் வளரவே
தன்னை மெழுகென உருக்குவாள்!
புரிகிறதா மாதரே!

தன்னை தாழ்மைப் படுத்துவதை எண்ணி
பெண்ணவள் கலங்க மாட்டாள்!
ஒவ்வொரு ஆணின் பின்னும் புகழ்சி சேர
உடைமை ஆனவளாய் ஆன பின்னும்
பெறுமை கொள்ள மாட்டாள்!
புரிகிறதா மாதரே!

பொறுமையின் சின்னமான பெண்ணே
அவள் பிரசவ வலியை கூட
இதயமாற ஏற்றுக் கொள்வாள்!
தியாகத்தினு திருவுடலென பெண்மையின்
உன்னதத்தை என்றுமே
சான்றாக்கி விட பிறந்தவள்!
புரிகிறதா மாதரே!

காலமும்,சூழலும் அவளை
முடக்கிய போதும்!
தடைகளை தாண்டி
விண்ணில் எல்லாம் பயணம் சய்தால்
காலாகாலமாய் தோன்றிமறையும்
பெண்ணின கொடுமைக்கும்
அவளே துணிந்து நின்று
புரட்சிகரமான விடை சொன்னாள்!
புரிகிறதா மாதரே!

அமைதியென்னும் ஆடை உடுத்தியவள்
நடுநிலையாய் உலகினிலே வாழ்வாள்!
நீதியென்னும் சட்டத்திற்கு கூட
அவளின் திருப்பெயரே நீதித்தாய் எனப் பெயர் ஏற்றது!
புரிகிறதா மாதரே!

உலகின் நீதிமன்றங்களில் கூட தீர்ப்பு தவறலாம்!
ஆனால் அவளின் தீர்ப்பில் ஏதும் தவறுகள் இறாது!
முடிவுகள் அவளை முடக்கி விட செய்தாலும்
அவள் முயற்சிக்க என்றும் தவறி விட மாட்டாள்!
புரிகிறதா மாதரே!

அவளது அழகு ஒரு கலையாகும்!
அவளது உடல் ஒரு நதியாகும்!
அவளது அமைதி உலகினையே வெள்ளும் ஆயுதமாகும்!
அவளது வெட்கம் கூட பல வெற்றிகளுக்கு தந்திரோபாயமாகும்!
புரிகிறதா மாதரே!

அவளது வழி நில்லுங்கள் அமைதி காணுங்கள்!
நாணம் கொள்ளுங்கள் நல்லொழுக்கம் பல பெறுங்கள்!
நல்வழியென அவள் சொன்ன வழி சென்றாலே போதும்!
நிறை திணையினை உடைய வெற்றி பல அடைவீர்கள்!
புரிகிறதா மாதரே!

H.F.Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

பெண்மையின் வெள்ளோட்டத்தில் கரை சேர்ந்த மாதரே! அணை திரந்து வாருங்கள் அலைகள் எல்லாம் மீண்டும் கடலையே சேரும் கரையை அல்ல! அலை மோதும் துன்பங்களையும் அவளின் கண்ணீர் தண்ணீர் ஆக்கும் வேறூண்டும் வேதனை கூட…

பெண்மையின் வெள்ளோட்டத்தில் கரை சேர்ந்த மாதரே! அணை திரந்து வாருங்கள் அலைகள் எல்லாம் மீண்டும் கடலையே சேரும் கரையை அல்ல! அலை மோதும் துன்பங்களையும் அவளின் கண்ணீர் தண்ணீர் ஆக்கும் வேறூண்டும் வேதனை கூட…

4 thoughts on “மாதரே!

  1. Nice post. I was checking constantly this blog and I am impressed! Extremely useful information particularly the last part 🙂 I care for such information a lot. I was looking for this certain information for a long time. Thank you and best of luck.

  2. Great post but I was wanting to know if you could write a litte more on this subject? I’d be very thankful if you could elaborate a little bit further. Bless you!

  3. I just could not go away your web site prior to suggesting that I extremely enjoyed the standard information an individual provide to your visitors? Is going to be back regularly in order to inspect new posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *