நாங்கள் ஏழைகள்

  • 12

விடுதலை கிடைக்குமா
விடையறியா எங்கள் வாழ்வில்
அன்றாடம் அலைந்தால்தான் அடுப்பும் எரியும்
விதியே இதுதானா தலைவிதி

வயிறு கொதிக்கிறது
உலை வைக்க அரிசியில்லை
வெளியிறங்கி பிச்சை எடுக்கவும்
ஊரெல்லாம் ஊரடங்கு உத்தரவு

கொரோனாவே நாங்கள் இருக்கிறோம்
உன் வாழ்வை எங்களில் வாழ்ந்து விடு
தினம் தினம் நடைபிணமாய் அலைவதை
உன் காலடியில் சரணடைகிறோம்

கொரோனாவால் இறந்தோம் என்ற
அடைமொழியாவது கிடைக்கட்டும்
ஏழை என்ற வார்த்தை இனியாவது மடியட்டும்

கூலித்தொழில் செய்தால்தானே
கூழாவது குடிக்க முடியும்
கூண்டுக்கிளியாய் நாங்கள் சிறகுடைந்து கிடைக்கிறோம்
யார் வருவார் எங்களை தேடி
ஊரே அடங்கி கிடக்கிறது
வீடேல்லாம் எரிகிறது பசி வந்து

நோய் வந்தாலும் மருந்து வாங்கவும்
வலிமையின்றி கிடக்கிறோம்
கொரோனாவே விலகி விடு
இல்லையென்றால் அடியோடு அழித்து விடு

கண்ணக்கட்டி நடுக்காட்டில்
விட்டது போல் உள்ளது இந்த வியாதி
கடக்கவும் முடியவில்லை கடந்து செல்லவும் முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
எங்கள் உயிர் என்னவாகும்
கொரோனாவே விலகி விடு
ஊரடங்கு தளர்த்தப்படட்டும்

எங்கள் உடல் தேய்ந்தாவது
உழைத்து வாழ்கிறோம்
கூலித்தொழில் செய்தாவது
வயிற்றை கழுவி நாள் கழித்து விடுகிறோம்
கொரோனாவே விலகிவிடு

அரசாங்கமாவது அரவணைக்குமா
ஆறுதலுக்காவது உதவிக்கரம் கிடைக்குமா இனியாவது
எங்கள் வாழ்வில் வெளிச்சம் கிடைக்குமா
பேராசை படுகிறோம் நாங்கள் ஏழைகள்….

அனுகவி றிப்கான்
அட்டாளைச்சேனை-06

விடுதலை கிடைக்குமா விடையறியா எங்கள் வாழ்வில் அன்றாடம் அலைந்தால்தான் அடுப்பும் எரியும் விதியே இதுதானா தலைவிதி வயிறு கொதிக்கிறது உலை வைக்க அரிசியில்லை வெளியிறங்கி பிச்சை எடுக்கவும் ஊரெல்லாம் ஊரடங்கு உத்தரவு கொரோனாவே நாங்கள்…

விடுதலை கிடைக்குமா விடையறியா எங்கள் வாழ்வில் அன்றாடம் அலைந்தால்தான் அடுப்பும் எரியும் விதியே இதுதானா தலைவிதி வயிறு கொதிக்கிறது உலை வைக்க அரிசியில்லை வெளியிறங்கி பிச்சை எடுக்கவும் ஊரெல்லாம் ஊரடங்கு உத்தரவு கொரோனாவே நாங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *