அரக்கன் வந்தான்!

  • 7

இரவும் பகலும் மறந்து இலயித்து போய்
இருந்தோம் கொஞ்ச வருடங்களாய்.

சதியா இல்லை விதியா என தெரியவில்லை
இந்த புதிய அரக்கன் வருகை என்ன
சொல்ல விழைகிறான் என்றும் புரியவில்லை.

எம்மை எல்லாம் நொடிக்கொருமுறை
கை கழுவ விட்டான்
இப்படியாக ஒட்டுமொத்தமாக எம்மை
எல்லாம் அழித்து விட்டுத்தான்
அவன் கை கழுவப்போகிறான் போல.

அடுத்தடுத்து அவன் லிஸ்டில்
எத்தனை பேரைத் தான்
இரையாக்கி கொண்டிருக்கிறான்.

ஊரடங்கி பாரடங்கி மயானம் போல்
காட்சியளிக்கும் தேசத்தில் இனி
வாழ்வதற்கு யாருக்கும்
தான் தைரியம் வந்துவிடுமா!

எங்கள் மக்கள் எத்தனை அனர்த்தம்
வந்த போதிலும் மிடுக்குடன்
எழுந்தவர்கள் அல்லவா.
அரக்கா உன் வருகையால்
அவர்களையும் சாய்த்துவிட்டாயே!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்று சொன்னார்கள் அல்லவா அன்று
ஒரு கிருமி உன்னால் யாரும் ஒன்று- நாசகாரா!
சேரவே முடியாமல் ஆக்கி வைத்துவிட்டாயே

உன் அழிவு வெகு தொலைவில் இல்லை
சாதி மத தேச இன வேறுபாடு களைந்து
உனை எதிர்க்க ஒட்டுமொத்த
உலகும் ஒன்று திரண்டுள்ளது
எங்கள் பலம் அறிவாய் கண்டுகொள்.

உன்னால் எங்களில் சிலரை தான்
காவு கொள்ள முடியும் – எங்களால்
உன் எச்சத்தை கூட விட்டுவைக்காமல்
அழிக்க முடியும் – அந்நாள்
வெகு தொலைவில் இல்லை.

A. L. F. Sanfara
அக்கரைப்பற்று.

இரவும் பகலும் மறந்து இலயித்து போய் இருந்தோம் கொஞ்ச வருடங்களாய். சதியா இல்லை விதியா என தெரியவில்லை இந்த புதிய அரக்கன் வருகை என்ன சொல்ல விழைகிறான் என்றும் புரியவில்லை. எம்மை எல்லாம் நொடிக்கொருமுறை…

இரவும் பகலும் மறந்து இலயித்து போய் இருந்தோம் கொஞ்ச வருடங்களாய். சதியா இல்லை விதியா என தெரியவில்லை இந்த புதிய அரக்கன் வருகை என்ன சொல்ல விழைகிறான் என்றும் புரியவில்லை. எம்மை எல்லாம் நொடிக்கொருமுறை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *