கொரோனா கெத்துடா

  • 15

மத்தியானம் 11 மணி இருக்கும். உச்சி வெயில் நச்சுனு நடு மண்டைலயே விழும் வெளியில போனா. அதனால வெளில எட்டிப் பார்த்தபடி ஜாஹிர் நானா, “ஸைமா…! ஸைமா…!” னு மகள கூப்பிட்டாரு.

“என்ன வாப்பா! வேலையும் இல்ல வெட்டியும் இல்ல தானே! நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்க”

னு நக்கலா கிண்டல் செய்ய, கடுப்பான வாப்பா,

“நாம இப்படி இருக்குற ஆள் தானே… சரி என்னமா கறி பகலைக்குனு” கேட்க,

“மீனுமில்ல, இறைச்சும் வாங்கலாது. கறுவாட்ட போட்டு அவியல் ஒன்னு போடுவம்னு பார்க்குறேன் பா” இருமிக்கிட்டே லாஹிர் நானாவ நெருங்கி வந்தா அரும பொண்டாட்டி பைருஷா தாத்தா.

“வராதீங்க! வராதீங்க! எதுக்கும் ரெண்டு அடி தள்ளியே நில்லுங்க!, கொரோனாவோ தெரியல உங்களுக்குன்னு” காரசாரமா கலாச்சதும் வந்த வேகத்துலயே பைருஷா தாத்தாட கால் ஸ்பீட் பிரேக் போட்டு நகராம நின்னுருச்சி.

ஸைமாக்கு வந்த சிரிப்ப அடக்க முடியல சிரிச்சிட்டா… “ஒரே! வாப்பாக்கும் மகளுக்கும் விளையாட்டு தான்னு” பேசிட்டு போயிட்டா பைருஷா .

“பைருஷா தாத்தா! பைருஷா தாத்தா! வீட்டுல யாருமில்லயா புள்ளைகள்?” னு முகத்துல முக்காடுத்துணிய இழுத்து மறைச்சிட்டு வெளியாலயே நின்னுட்டு இருந்த சரீனா.

ஷைமா, “உள்ள வாங்க மாமி னு” கூப்பிட்டாள்.

சரீனா, “எங்கம்மா உம்மா?”

“உம்மா சமைக்குறாங்க மாமி… உங்கட வீட்டுல என்ன மாமி கறி..? சமைச்சாச்சுதா?” னு கதிரைய இழுத்து கொடுத்து இரிங்கன்னு கண்ணால சைகை செஞ்சாள் ஷைமா. தேங்கா பாதியோட வந்த பைருஷா தாத்தா,

“கொரோனா வைரஸ் வந்த பொறகு ஆளையே காணம்னு” சொல்ல

வராத கண்ணீர் வர துடிக்குறது போல கண்ணெல்லாம் சிவப்பாக சரீனாக்கு,

“எங்க தாத்தா… இவரு அன்னைக்கு அன்னைக்கு உழைக்குறத வச்சித்தான் வயிறு நெறஞ்சுது. ஆட்டோ ட்ரைவர் என்டதால இப்ப ஹையர்களும் இல்ல. கேர்பிய எடுத்தாலும் கடைக்கு சாமான்கள வாங்க போகவே டைம் சரி! உழைப்பு இல்லாதத்தால கறி புளி ஒன்னுமில்ல” என்றாள்.

“இரு சரீனா ரெண்டோ மூனோ முட்டை இருந்திச்சு தாரன்” னு இரவு சாப்பாட்டுக்கு ஏதும் பண்ணுவம் எண்டு வச்சிருந்த முட்டைய உள்ள போய் எடுத்துட்டு வந்து கொடுத்தா பைருஷா.

“ஏதோ இந்த நேரம்னு பார்த்து, அல்லாஹ்னு கையில கெடச்ச சீட்டு சல்லி கொஞ்சம் இருக்கு. அதுக்கு தான் அத இதன்னு வாங்கிப் போட்டு சமாளிக்கிறன் சரீனா. எப்போதான் இது லேசாகுமோ.?”

இடையில ஒரு பெருமூச்சோட அன்னைக்கு நோன்பு புடிக்க சொல்லி இருந்திச்சே புடிச்சதா உங்கட வீட்டுல?” னு சமைக்குற வேலையும் பார்த்துக் கொண்டே கேட்க,

“நான் புடிக்கல தாத்தா.மகள் புடிச்ச. அதோடையே அல்லாஹ் லேசாக்குவான் என்ட நம்பிக்கை இருக்கு. நம்மட நாட்டுலயும் ஆள்கள் கொரோனாவால கூடுற மாதிரிக்கு பயமாத்தான் இருக்கு” ன்னு சொல்லிக் கொண்டே வீட்டுக்கு போய் சமைக்கனும் போய் வாரன் லேட் ஆகுதுன்னு போனாள் சரீனா.

“என்னட வாப்பா! கடைல போலீன்ல ஆட்கள். கடல்ல இருந்து கரை மட்டும் நிக்குறாங்க. மறா ரெண்டு மணிக்கு கேர்பி போடுறானா” னு கத்திக்கொண்டே வந்தான் சமீர்.

பெட் ரூம்ல இருந்து வெளிய வந்த ஷைமா நானாவ மேல இருந்து கீழ வர பார்த்ததுண்டு,

“வாப்பா! இங்க பாருங்க நானா கை கால் கழுகாம வீட்டுக்குள்ள வாரான்… போடா போ… போய் கழுவிட்டு வா.. எங்க பெய்டு சுத்திட்டு வந்தீயோ யாருக்கு தெரியும்” னு சைமா கையால புடிச்சி தள்ளினா வெளியில.

தள்ளுன்ன தள்ளு சரிவியபடி நின்ற சமீர் “இருடீ! இந்த கொரோனா முடியட்டும். அப்புறம் உனக்கு இருக்குன்னு” கோபத்தோடு கூறிக்கிட்டே புளம்புறத கன்டினியூ பன்றான்.

“போன வருஷம் சஹ்ரான் மாமா மாஸ்க்க கலட்ட வச்சாரு. இந்த வருஷம் கொரோனா மாமி ஆம்பள நம்மலயும் சேர்த்துலியா மூட வச்சிட்டா.. அவளே!”

னு வந்த கோபத்தெலாம் தண்ணியில காட்டினான்.

“சரி மகன்! பொளம்புனது போதும் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” னு மதிய உணவு மந்தமாய் பரிமாற இடையில சபை சமாதானத்த அவிழ்க,

“வேலை இல்லாம வெட்டியா இருக்குற பட்டதாரிங்க கஷ்டம் இப்போ எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் கொரோனா கெத்துடா”

னு சமீர் சொல்ல, “பேசாம வாய மூடிட்டு திண்ணு!” னு ஒரு உருக்கல் அவ்வளவுதான். அவியல் அடி வயித்துக்குள்ள மெல்ல இறங்கியது.

(இருப்பதை அக்கம் பக்கம் இல்லாதோர்க்கு கொடுத்து , திரையோடு விழித்திருங்கள்.)

கவிச்சாரல் சாரா
புத்தளம்

மத்தியானம் 11 மணி இருக்கும். உச்சி வெயில் நச்சுனு நடு மண்டைலயே விழும் வெளியில போனா. அதனால வெளில எட்டிப் பார்த்தபடி ஜாஹிர் நானா, “ஸைமா…! ஸைமா…!” னு மகள கூப்பிட்டாரு. “என்ன வாப்பா!…

மத்தியானம் 11 மணி இருக்கும். உச்சி வெயில் நச்சுனு நடு மண்டைலயே விழும் வெளியில போனா. அதனால வெளில எட்டிப் பார்த்தபடி ஜாஹிர் நானா, “ஸைமா…! ஸைமா…!” னு மகள கூப்பிட்டாரு. “என்ன வாப்பா!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *