குரங்கு மனசு பாகம் 64

  • 17

“சர்மி…”

அவன் கைகள் நடுங்க, நா வரண்டு போனது. தாயுடன் ஒட்டியிருந்த குழந்தையை மெதுவாக தூக்கி எடுத்தான். தன்னவளுக்கு ஏதோ விபரீதமென்பது மட்டும் புரிய, கால்கள் மெதுவாக பின் வாங்கின.

“நோ….”

தலையில் கை வைத்தவனாய் கத்த, நாற் திக்கும் அவன் குரல் எதிரொலித்தது. அக் கதறல் கேட்டு கதிகலங்கிப் போன ராபியா, துடித்துக் கொண்டே ஓடி வந்தாள்.

“என்ன மகன்?”

அப்படியே வேரற்ற மரமாக தொப்பென்று நிலத்தில் சாய்ந்தவனைக் கண்ட ராபியாவுக்கு தன் மகளைப் பார்க்கும் சக்தி இருக்கவில்லை.

“எல்லாம் முடிஞ்சு போச்சு”

என்பது போன்ற மகனின் கை அசைவினை அந்த பெற்ற உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை.

“ஆன்ட்டீ ஏன்ட சர்மி, ஏன்ட சர்மி… ஐயோ… ஏன்ட உசுருக்கு என்ன நடந்த ஆன்ட்டீ?”

“என்ன மகன் சொல்ல வாரீங்க? ச…சர்மிக்கு என்ன மகன்? அவள் தான் தூங்கிட்டு இருக்காளே?”

“இந்த தூக்கத்துல இருந்து என் பொஞ்சாதி எழும்ப மாட்டாளா ஆன்ட்டீ?”

“மகன்?”

அத்தாய்க்கு எல்லாமே இருண்டு போக, வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சில் கைவைத்தவனாய் தன்னைத் தானே அடித்துக் கொண்டழுத அதீகின் நிலை யாருக்கும் வரக் கூடாதே.

“ஹாஸ்பிடல் கொண்டு போமா மகன்?”

“இன்னம் என்ன இருக்கு ஆன்ட்டீ? என்ன ட்ரீட்மன்ட் செஞ்சா என் உசுரு கண் முழிப்பாங்க? சொல்லுங்க, சொல்லுங்க ஆன்ட்டீ?” கத்திக் கதறினான் அதீக்.

“இவள் இல்லாத உலகம் எனக்கு வேணாம் ஆன்ட்டீ, பேசாம நான் செத்து போயிட்றன்.”

“மகன் பிலீஸ்…”

மாமியாரின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் அறையை விட்டு வெளியே போக முனகையில் கட்டிலில் கிடந்த தனது நாற் குழந்தை “கேஷ்” என்றழ, அந்த அழுகையை சமாதானப் படுத்தும் உக்தி தாயை மீறி யாருக்குத் தெரியும் என்று நினைக்கையில் தந்தையாய் அவனால் இன்னும் இறுக்கமாய் இருந்தது.

“ஆக வேண்டிய காரியத்த பாருங்க ஆன்ட்டீ”

விம்மிக் கொண்டே சொல்ல, மூச்சற்று கிடந்த மனைவியை விட்டு குழந்தைக்கு பால்மா எதுவாலும் வாங்கி வர புறப்பட்டாள். அந்தப் பயணத்தில் ஆயிரம் விடயங்களை அவன் அகம் மீட்ட எல்லாமே வெறுப்பாய் தோன்றியது அவனுக்கு..

ஆம் சர்மி இறந்து விட்டாள். உண்மையிலேயே இறந்து விட்டாளா?

கதை தொடரும்..
Aathifa Ashraf

“சர்மி…” அவன் கைகள் நடுங்க, நா வரண்டு போனது. தாயுடன் ஒட்டியிருந்த குழந்தையை மெதுவாக தூக்கி எடுத்தான். தன்னவளுக்கு ஏதோ விபரீதமென்பது மட்டும் புரிய, கால்கள் மெதுவாக பின் வாங்கின. “நோ….” தலையில் கை…

“சர்மி…” அவன் கைகள் நடுங்க, நா வரண்டு போனது. தாயுடன் ஒட்டியிருந்த குழந்தையை மெதுவாக தூக்கி எடுத்தான். தன்னவளுக்கு ஏதோ விபரீதமென்பது மட்டும் புரிய, கால்கள் மெதுவாக பின் வாங்கின. “நோ….” தலையில் கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *