நள்ளிரவு சந்திப்பு

  • 18

எங்களை படைத்த ரப்பை நினைவுபடுத்தல், அவனை வணங்குதல், அவனை பயப்படுதல், எந்த நிலையிலும் அவன் சிந்தனையோடு இருத்தல், எங்களின் மீது கட்டாயக்கடமை ஆகும் . ஆனால் துரதிர்ஷ்டம் மனிதனின் வேலைப்பளு இன்னும் பல விடயங்களால் அவனை மறந்து விடுகிறான்.

“அவனுக்காக 5 நிமிடம் ஒதுக்கி குர்ஆன் ஓதுகிறோமா??”

“அல்லது 5 நிமிடங்கள் தஸ்பீஹ் செய்கிறோமா??”

“2 ரக்அத் இரவில் எழும்பி தொழுகிறோமா ???”

“தனிமையில் அழுது அவனோடு பேசுகிறோமா” ???

உள்ளத்தை தொட்டு பார்க்க கடமை பட்டிருக்கிறோம். தனிமையில் அல்லாஹ்வை அதுவும் இரவு நேரத்தில் நினைத்து 2 ரக்ஆத் தொழுகிற போது எவ்வளவு பெரிய சந்தோஷம் மனதுக்கு ஆறுதல், நிம்மதி கிடைக்கும். அதை இழந்துவிட்டு அந்த இரவு நேரம் தனிமையில் ஆபாசக்காட்சிகளை பார்த்துக்கொண்டும், அரட்டை, போதைப்பொருள் பாவனை எவ்வளவு நிம்மதியை இழக்கிறார்கள்.

ஒட்டுமொத்த உலகமும் தூங்கிக்கொண்டிருக்கின்ற நிலைமையில் ஒரு பூனையை போல மெதுவாக சென்று தண்ணீரை தொட்டால் சிலிர்கும் உடம்பு, நரம்பு முடிச்சுககளின் அதிர்வு, உடம்பெல்லாம் கூச்சம் அப்படியே வுழு செய்து அந்த நள்ளிரவு தான் மட்டும் தகபீர் கட்டி தன்னந்தனியாக கை கட்டி அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை நினைக்கும் போது உடமெல்லாம் புல்லரிக்குமே.

ஈமானிய பூக்கள் ஒற்றை நொடியில் மலரும் அந்த உணர்வோடு தூங்கினால் மனம் முழுக்க சொல்லமுடியாத இன்பமாக இருக்கும். அதே போல் அல்லாஹ் எவ்வளவு சந்தோசப்படுவான்.

“அவர்கள் தமது இரட்சகனுக்காக இராக்காலங்களில் ஸூஜூத் செய்து நின்று வணங்குவார்கள்.”

“அடியான் தனது இரட்சகனுக்கு மிக அண்மையில் இருக்கும் நிலை ஸுஜூத் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.” (முஸ்லிம்)

“நபி ஸல் அவர்கள் கூறினார்கள் கடமையான தொழுகையை அடுத்து சிறந்த தொழுகை இரவின் நடு நிசி தொழுகையாகும்.” (முஸ்லிம்)

“மனிதர்களே !!! ஸலாத்தை பரப்புங்கள், உணவளியுங்கள், இரவில் மக்கள் தூங்கும் நிலையில் நின்று வணங்குங்கள் சுவனத்தில் பாதுகாப்பாக நுழைவீர்கள். ” (அஹ்மத், திர்மிதி)

எனவே மேற்கூறிய ஹதீஸ்கள் இரவு நேரத்தொழுகையின் சிறப்பை எடுத்துக் காட்டுவதை பார்க்கலாம். ஆக எங்களுடைய நடைமுறை வாழ்க்கையை எடுத்துப் பார்க்கலாம்.

“ஒருவரை சந்திப்பதற்கு இரவு விளங்காது” ‘அதற்காக விழிப்பான். என்னன்னமோ தன்னை தயார்ப்படுத்துவான்.’ “ஆனால் படைத்த ரப்பை வணங்க கஷ்டம் அவனுக்காக விழிக்க கஷ்டம்
சிந்திக்க வேண்டும்..”

எவ்வளவு மடத்தனமான ஒரு செயலை செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். உள்ளத்தை ஆழமாக தொட்டுச்செல்வதற்காக சுவாரஸ்யமான கற்பனை உறையாடல் ஒன்றை பதிவிடுகிறேன்.

மனைவி : எழும்புங்க தங்கம் TIME என்ன தெரியுமா
கணவன் : சரியான தூக்கம் வா.
மனைவி : தூக்கமா ? எனக்கும் தூக்கம்தான். எழுந்திருங்க.
கணவன் : 05 minutes தூங்கிட்டு வாரேண் தங்கம்.
மனைவி : தேவையில்லை BOSS.
இனி தண்ணிதான் தெளிப்பேன்.
கணவன் : Mmm

மனைவி : கோபப்படாதிங்க
கணவன் : Mmm சரி.

மனைவி :சரிடா ஜமாத் நடத்துங்க.
நான் இகாமத் சொல்லுரேன்.
கணவன் : சரிடா செல்லம்.

தொழுகை முடிந்தது…

கணவன் : எங்கே போரி ங்க
மனைவி : வீட்டு வேலை கொஞ்சம் இருக்கு செய்யப் போரன்டா
கணவன் : வேலை பிறகு செய்ங்க . நானும் help பண்ணுரேன்.
மனைவி : இப்போ என்னவாம்
கணவன் : வாங்க சேர்ந்து AL QURAN ஒதலாம். எனக்கு தஜ்வீத் முறைப்படி ஓதிக் கொடுங்க. நீங்க ஒரு பக்கம் ஒதுங்க .நான் ஒரு பக்கம் ஓதுரேன். சரியா
மனைவி : சரி MY SWEET

அபூஹூரைரா (ரழி ) அறிவிக்கிறார்கள், நபியவர்கள் நவின்றார்கள்: (தான் இரவில் விளித்து தொழுதுவிட்டு தனது மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விளித்து தொழுதுவிட்டு தனது கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக). (அபூதாவூத்)

எனவே ஒவ்வொரு வீட்டிலும் இது போன்ற முன்மாதிரிகளை செய்து வந்தால் வீட்டில் பரகத்தும், மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனவே ஒவ்வொரு இன்றிலிருந்தாவது தனியாகவோ. குடும்பமாகவோ. வீட்டில் முடிந்தளவு இதனை நடைமுறைப்படுத்துங்கள்.

இன்ஷா அல்லாஹ்..

Faslan hashim ✍
South eastern university of srilanka
BA ®

எங்களை படைத்த ரப்பை நினைவுபடுத்தல், அவனை வணங்குதல், அவனை பயப்படுதல், எந்த நிலையிலும் அவன் சிந்தனையோடு இருத்தல், எங்களின் மீது கட்டாயக்கடமை ஆகும் . ஆனால் துரதிர்ஷ்டம் மனிதனின் வேலைப்பளு இன்னும் பல விடயங்களால்…

எங்களை படைத்த ரப்பை நினைவுபடுத்தல், அவனை வணங்குதல், அவனை பயப்படுதல், எந்த நிலையிலும் அவன் சிந்தனையோடு இருத்தல், எங்களின் மீது கட்டாயக்கடமை ஆகும் . ஆனால் துரதிர்ஷ்டம் மனிதனின் வேலைப்பளு இன்னும் பல விடயங்களால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *