குரங்கு மனசு பாகம் 65

  • 11

“எல்லாம் என்னால தான்” தன் மீது என்றுமில்லா கவலை உச்சத்தை தொட, தனக்கென்று இரண்டு வாரிசுகள் இல்லாதிருந்தால் சர்மியோடு நிச்சயமாக மாண்டு போயிருப்பான். வீட்டில் சனநெரிசல் மெதுவாக கூட,

“ஆன்ட்டீ என் புள்ளக்கி முதல்ல இத ஊத்தி குடுங்க”

கொண்டு வந்த பால்மா வை அழுகையோடு மாமியாரிடம் கொடுக்க, ராபியாவும் அதற்காகவே காத்திருந்தவளாய், தாய்ப்பாலை சுவைக்க வேண்டிய சிறிசுக்கு மிகவும் சிரமப்பட்டு போத்தல் பால் வழங்கினாள்.

“நல்லா இருந்த பொம்புள, திடீருன்னு என்ன ஆவின?”

ஊரார், உற்றார் கதை தொடர, வெருச்சோடிப்போய் அமர்ந்திருந்தாள் ராபியா.

“என் உசுரு என்ன விட்டு போயிட்டா உம்மா, இப்போ சரி அவள மன்னிச்சிடுங்கம்மா பிலீஸ், மன்னிச்சிடுங்கம்மா, மன்னிச்சிடுங்க”

தன் தாயோடு அழைப்பில் கதறி அழுதுக் கொண்டிருந்தான் அதீக். சர்மி நிரந்தரத் தூக்கத்தில் எதையும் அறியாது படுத்திருக்க, வருவோர் போவோர் எல்லோருமே அந்நாற் குழந்தையின் நிலை எண்ணி அழுது சென்றனர். நேரம் சிறிது நகர, தாய் வாஹிதாவும் இரண்டாமவனும் வந்து சேர, அதீகின் அழுகை இன்னும் அதிகரித்து.

“அழாத டா”

“ஏன்ட புள்ளகளுக்கு உம்மா இல்லாம போயிட்டேமா…”

தனக்கு மனைவி இல்லையே என்றால் அந்த கசடு உள்ளம் தன்னவளுக்கு ஏதும் சொல்லி விடுவாளோ என்ற பயத்தால் வந்த வார்த்தை அது.

“அதுதான் நாங்க இருக்கோமே! அழாத டா…”

தன்னவள் மீது உயிராய் இருந்தவனை ஆற்றுப்படுத்தும் திறன் யாருக்கும் இருக்கவில்லை.

“அபி உம்மா அல்லாஹ் கிட்ட போக போறாங்களா?”

கண்ணைக் கசக்கியவனாய் தந்தையிடம் வினாத் தொடுத்த மகனை கட்டியணைத்து கதறினான் அதீக்.

“மிஸ்டர் அதீக் பள்ளிக்கு அறிவிக்கனும், டீடய்ல்ஸ் எல்லாம் கொஞ்சம் சொன்னா நல்லம்.” பக்கத்து வீட்டவர் தாளுடனும் பேனாவுடனும் வந்து நிற்க,

“நோ…. என் சர்மி என்ன விட்டு போக மாட்டாள், என் சர்மிக்கு ஒன்னும் இல்ல, எல்லாரும் இங்கிருந்து போயிடுங்க” பைத்தியம் பிடித்தவன் போல் ஒப்பாறி வைத்தான் அதீக்.

எது எப்படியோ,

“இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட நாம் அவனிடமே மீள வேண்டும்”

என்பதற்கிணங்க மரண நித்திரையில் இருந்த அதீகின் உயிர் மனைவி மண்ணுக்குள் வைக்கப்படும் நொடிகள் நெருங்க,

“லாஸ்ட்டா பார்க்காதவங்க வந்து பார்த்துக் கோங்க” பக்கத்திலிருந்த ஒருத்தர் வாய் திறக்க, அழுகையோடு ஒவ்வொருவராய் வந்து போயினர்.

“அழாதிங்க அபி, உம்மா கண்ண திறந்திடுவாங்க”

விபரீதம் அறியா மகன் தந்தையிடம் ஒட்டிக் கொண்டு ஏதேதோ சொல்ல, பதிலுக்கு என்ன சொல்வதென்று அறியாமல் வீறிட்டழுதான் அதீக். ஐனாஸா தூக்கப்படும் நேரம் நெருங்க, அதீகின் காதல் மனைவி அவனை விட்டு நிரந்தரமாய் பிரியும் நொடிகள் வர,

“என்ன விட்டு எங்கடீ போற, என்ன விட்டுப் போக உனக்கு எப்புடி மனசு வந்திச்சு?”

வாய் பிதற்றிக் கொண்டிருந்த அதீகின் நிலை சுற்றியிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்திட்டு. சர்மியின் உடல் மண்ணால் மூடப்பட, அந்த கவலையிலிருந்து எத்தனையோ நாட்கள் விழித்துக் கொள்ளவில்லை அதீக். அப்பொழுது தான் அவனை இன்னுமோர் பிரச்சினை ஆட்கொண்டது. ஆம் பிள்ளைகளை யாரிடம் விடுவது?

“மகன் ரெண்டு பேரயும் நானே பார்த்துக்குறன்”

“யே உங்கள போல பணம் பார்த்து என் பேரக் குழந்தைகளோட லய்ப் அ ஸ்பொய்ல் பண்ண போறீங்களா?” வாஹிதா வாய் திறக்க,

“இதுக்கு மேல யாரும் எதுவும் பேசாம இருக்கீங்களா பிலீஸ், உம்மா நான் சொல்றன்னு தப்பா எடுத்துக்காதிங்க, இந்த புள்ளகள் அவங்க உம்மம்மா கூடத்தான் பழகி இருக்காங்க. உம்ம இல்லாம அந்த ஏக்கமே போகாத நிலமயில உம்மம்மாவ விட்டு பிரிக்க ஏலாது… அப்போ மாமி மாமி ன்னு சர்மி உங்களத் தேடி வந்தப்போ நீங்க ஏத்துக் கொண்டு இருந்தா ஒருவேள உங்களோட கூட்டிட்டு போயிருக்கலாம் ஆனா நீங்க தான்..”

ஏதோ சொல்ல வந்தவன் வாய் மூடி நின்றான்.

ரொம்ப தேங்ஸ் மகன். நீங்க என்ன சொல்லுவீங்களோ தெரியான்னு நான் பயந்தே போயிட்டன். என் புள்ள விஷயத்துல நான் தப்பு தான். ஆனா பேரப்புள்ளகளோட விஷயத்துல அந்ந தப்பு நடக்காது. நான் பட்டது எல்லாம் போதும். என்ன தயவு செஞ்சி மன்னிச்சிக் கோங்க மகன்”

முகத்தில் கையை புதைத்துக் கொண்டு அழுதாள் ராபியா.

அது வேணாம் இது நல்லம், இல்ல இல்ல இது வேணாம் அது நல்லம்னு கொப்பு விட்டு கொப்பு தாவுற குரங்கு மனசா இருந்திருக்காம பெண் கேட்டு வந்ததுமே ராபியா ஓகே பண்ணிருந்தா, சரி போனது போகட்டும்னு ரெண்டு தடவ தன்ன நாடி வந்த மருமகள வாஹிதா ஏத்துக்கிட்டு இருந்தா, அநியாயமா ஒரு உயிர் போயிருக்காது.

உம்மவ பார்க்கவா? கட்டினவளா காக்கவா என்ற நிலமையில தன்னவள இழந்த அதீகோட வலி வார்த்தையில முடியாது.

பணம் இருக்கும் போகும், பாசம் தான் எப்பவும் ஜெயிக்கும். குரங்கு மனசுகளா இருக்காம குணத்தில் நல்லோரா இருக்கத் தான் இந்த குரங்கு மனசு தொடர்கதை நீண்டது.

(வாசகர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்)

கதை முற்றும்
Aathifa Ashraf

“எல்லாம் என்னால தான்” தன் மீது என்றுமில்லா கவலை உச்சத்தை தொட, தனக்கென்று இரண்டு வாரிசுகள் இல்லாதிருந்தால் சர்மியோடு நிச்சயமாக மாண்டு போயிருப்பான். வீட்டில் சனநெரிசல் மெதுவாக கூட, “ஆன்ட்டீ என் புள்ளக்கி முதல்ல…

“எல்லாம் என்னால தான்” தன் மீது என்றுமில்லா கவலை உச்சத்தை தொட, தனக்கென்று இரண்டு வாரிசுகள் இல்லாதிருந்தால் சர்மியோடு நிச்சயமாக மாண்டு போயிருப்பான். வீட்டில் சனநெரிசல் மெதுவாக கூட, “ஆன்ட்டீ என் புள்ளக்கி முதல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *