மல்லிகை உரசும் மாலைக் காற்று

எங்கிருந்தோ புது வாசணை
என் தேகம் தாண்டிட முயல்கிறது
சந்தேகம் கொண்டு பார்க்கிறேன்
என்னவளாகக் கூட இருக்கலாம் என்று
மாலை வேலையில் மாடிக்கதவருகில்
மணக்கும் இந்த வாசணை
எப்படி என்னவளாகிட முடியும்

கண்களிலோ தென்படவில்லை
வாசணையோ வெகு தொலைவிலும் இல்லை
மனக்குழப்பத்தில் இருந்த என் மனதிற்கு
மல்லிகை நினைவில் வர
சிரித்தே சிலிர்க்க வைத்துச் சென்றது
மல்லிகையை உரசிய அந்த மாலைக்காற்று

என்னவள் நினைவில் நான் இருக்க
எங்கிருந்து இங்கு வருகிறாய்
என்று வினா தொடுக்க
உன்னவள் சென்ற திசை நோக்கியே
என் வருகை என்று
விடையளிக்கிறது இந்த
மல்லிகையை உரசிய மாலைக்காற்று

மல்லிகை மணமோ உன்னிலிருக்க
மங்கையவள் வாசம் நான்
நுகரவில்லையே என்று வினா தொடுக்க

விந்தை அறிவாயா
மடிந்த மல்லிகை வாசம் என்னில் எப்படி

நான் உரசிய மல்லிகையே
அவள் கூந்தலில்தான்
என்று சிரித்து நிற்கிறது
மாலை வேலையிலே
மல்லிகையை உரசும் மாலைக்காற்று

மல்லிகை உரசும் மாலைக்காற்றே
காலையில் வருவாயா கவி தருகிறேன்
கற்பனையல்ல அவை என் உணர்வுகள்
கரைத்திடாமல் கொண்டு சேர்த்துவிடு
என்றே நின்றிருந்தேன்

விரைந்தே சென்றது
உன் தூதல்லவே நான்
உன்னவள் தூதூவன் என்று அந்த
மல்லிகையை உரசும் மாலைக்காற்று

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: