உனக்காய் ஒரு மடல் – கொரோனா

அகோரம் கொண்டு நீ வந்த நோக்கம்
என்ன வெற்றுக் கண் பாரா உயிரே நீ
உயிரை உயிர் தின்பது என்ன வகை நியாயம்

மூச்சடைச்சு விடும் மூச்சு இமைக்கும்
முன் நின்றது – என்ன ஆர்வம்
மனித உயிர் கொல்லியே உனக்கு

யார் செய்த சதி நீ
யார் போட்ட வலை நீ
சிக்கி தவிக்கின்றது
பெரிசு முதல் சிறிசு வரை
உன் மரண சிறைக்குள்

தாங்க முடியவில்லை உன் கோரம்
ஏற்க முடியவில்லை உன் பாரம்
விட்டு விடு மக்கள் பாவம்..

உன் வழியில் விழாதவர் யார்
பணக்காரரின் பணமும்
வாய் அடைத்ததுவே – பாவம்
கூலி வேலைக்கு செல்லும்
தொழிலாளி கூட்டில் அடைபட்டான்
தன் பசியையும் மறந்தான்

ஒன்னும் அறியா பால் குடி குழந்தை
அழும் ஓசையும் உன் காதில்
விழ வில்லையே மனமில்லா கோரமே

பட்டினியால் வாடும் உறவுக்கு வழி விடு
படிக்க செல்லும் பிள்ளைகளுக்கு வழி விடு
வெளிநாட்டு உறவுக்கு வழி விடு
மக்கள் உயிர்களுக்கு நிலை கொடு

மக்களின் காலம் உன் கைக்குள் பிடி பட்டதுவே
வீணாய் வீட்டுக்குள் பசியும் பட்டினியுமாய்
நாட்கள் விரைந்து செல்கின்றதுவே

மீண்டும் தந்து விடு எங்கள் நிம்மதியை
விட்டு செல் எங்கள் உயிரை எங்களிடம்
வெளி ஊர் சென்று வந்த கணவனை கூட
மனைவி அவள் துரோகியாய் பார்க்க வைத்தாய்

துடிக்கும் பிஞ்சு உயிரிடம்
அதன் தாயை ஒதுக்கி வைத்தாய்
சிறு தும்மல் கூட தும்ம முடியவில்லை
சந்தேகம் கொண்டு பார்க்க வைத்தாய் எம் சமூகத்தை

பசி உனக்கு எம் மீது உயிர் பசி
பசியும் இல்லை உணவும் இல்லை
நீ இருக்கும் வரை எமக்கு

போதும் உன் கண்கட்டி வித்தை
தடுமாறுவது அப்பாவி மக்களே இங்கு

கேட்கும் துஆ இறைவனிடம்
நீட்டும் கை இறைவனிடம்
வெறுங்கையாய் திரும்பாது
கோரமே உன் அழிவு நின்று விடும்…

நிந்தவூர் றிசாமா
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: