வியாபாரிகளே உங்களைத் தான்!

  • 23

நெருக்கபியான இச்சூழலில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய உங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுடன் நல்லமுறையில் நடப்பதானது இறைப் பொருத்தத்தை பெற்றுத் தருவதுடன், அளவிடமுடியாத நற்கூலிகளையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பமாகும்.

அவ்வாறு நல்லமுறையில் நடக்காத போது இதோ இரண்டு ஹதீஸ்கள் உங்களுடன் உரையாடுகின்றன.

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ரிபாஅத் இப்னு ராபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கிறார்கள்:
    “நிச்சயமாக வியாபாரிகள் மறுமையில் பாவிகளாக எழுப்பப்படுவர், எனினும் அல்லாஹ்வைப் பயந்து (மோசடி செய்யாது) நல்லமுறையில் நடந்துகொண்டு, உண்மையுரைத்து நடக்கும் சிலரைத் தவிர.”
    நூற்கள்: திர்மிதீ (1210), தாரமீ (2/247), இப்னு மாஜா (2146), இப்னு ஹிப்பான் (11/276)
  2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு ஷிப்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
    “நிச்சயமாக வியாபாரிகள் பாவிகள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கவில்லையா என்று வினவப்பட்ட பொழுது “ஆம் (ஹலாலாக ஆக்கியுள்ளான்) எனினும் அவர்கள் பேசிக்கொண்டு, பொய்யுரைத்து, (பொய்) சத்தியமும் செய்து, பாவியாகின்றனர்.”
    நூற்கள்: அஹ்மத் (3/428), ஹாகிம் (2/8)

இவ்விரண்டு ஹதீஸ்களும் கூறும் விடயங்கள்

  1. பொய்யுரைத்து, மோசடி செய்து, பொருட்களை விற்பதற்காக மக்களை ஏமாற்றி, பொய் சத்தியம் செய்யும் அனைத்து வியாபாரிகளும் பாவிகள்.
  2. இவர்கள் பாவிகளாக (மோசமானவர்களாக) மறுமையில் எழுப்பப்படுவர்.
  3. வியாபாரம் ஆகுமானதாக இருந்தும் பாவமான முறையில் வியாபாரத்தை மேற்கொள்வது பாவமாகும்.
  4. அல்லாஹ்வைப் பயந்து, அமானிதம் பேணி, மோசடி மற்றும் ஏமாற்றுவதைத் தவிர்ந்து, உண்மைத் தன்மையுடன் செயற்பட்டு, வாடிக்கையாளர்களுடன் நல்லமுறையில் நடக்கும் வியாபாரிகள் நல்லவர்கள்.
  5. இலக்கம் 4ல் கூறப்பட்ட நல்ல வியாபாரிகள் மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷூஹதாக்களுடன் வீற்றிருப்பர்.
  6. வியாபாரத்தை மேற்கொள்ளும் போது மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு செயற்படுவதும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.
நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா

நெருக்கபியான இச்சூழலில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய உங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுடன் நல்லமுறையில் நடப்பதானது இறைப் பொருத்தத்தை பெற்றுத் தருவதுடன், அளவிடமுடியாத நற்கூலிகளையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பமாகும். அவ்வாறு நல்லமுறையில்…

நெருக்கபியான இச்சூழலில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய உங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுடன் நல்லமுறையில் நடப்பதானது இறைப் பொருத்தத்தை பெற்றுத் தருவதுடன், அளவிடமுடியாத நற்கூலிகளையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பமாகும். அவ்வாறு நல்லமுறையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *