அன்றும் இன்றும் எம்முள்ளம்…

இறையோனின் இல்லமதில்
பாங்கோசை குரலதிலே
லயித்த எம்முள்ளம் – அன்று
இசையெனும் சதிவலையில்
சாத்தானின் தூண்டுதலில்
சரிவதுதான் ஏனோ? – இன்று

ஸஹாபாக்கள் பலரதின்
பண்பான சரிதையதில்
பூரித்த எம்முள்ளம் – அன்று
சினிமா நடிகர்களின்
சீர்கெட்ட காட்சிதனில்
மூழ்குவது ஏனோ? – இன்று

மாலை உதயமதில்
மறையைப் புரட்டிட
விரைந்த உள்ளம் – அன்று
மஃரிப் ஆனதும்
சீரியல் பக்கம்
செல்வது ஏனோ?- இன்று

கூட்டான வாழ்வுதனை
கூடியே வாழ்ந்த நாம் – அன்று
தனிமையெனும் பாதையதை
தேடியலைவதுதான் ஏனோ? – இன்று

பணம் செய்த சூழ்ச்சியா இது? – இல்லை
நாகரீத்தின் மோகமா இது?

சற்றே நாம் மீட்டிடுவோம்
சரித்திர வரலாற்றை!

J.Noorul Shifa
(Jaffna)

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: