ஞாபகத் தீ

0 Comments

உயிர் முனையில் உன் ஞாபகங்கள்
உதிரம் கொட்டுதென் எண்ணத்தில்
பருகிக் கொள்கிறேன்
கண்ணீர் குவளையில்
சேர்த்து வைத்த நினைவுகளை
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அல்லாடும் உணர்வுகள்
ஆகாய வழியில் ஊஞ்சலிட்டு ஆடுகிறது…

நடை பாதை சருகாய் நானும்
பொடிநடை போடு உன் கால் பட்டே
நான் இறக்கிறேன்……
உன் வாள் வீச்சு வார்த்தை
வெட்டிக்குவித்து என்னை,
உன்னை தொடரா தொலைவானம்
தாண்டி போகிறேன்
நான் தொலைவாகிறேன்….

கழிக்கண்ணோட்டம் கண்ணீர் சிந்துது
காட்சிகள் பிழைபட
கலைபட்டு,
காவல் கேட்குது நினைவுகள்
கொள்ளை போகாமல்…
நீ வைத்த உள்ளத் தீயில்
புஸ்வாணமாய் உன் ஞாபகம்கள்
புஸ் என்ற சத்ததுடன்..,

தூவான துறள்களாய்
என் மேக மொட்டுக்களில் நீ…
துளையிடுகிறாய்
உள்ளச்சிதறல்களில் இன்னுமின்னும்,
என்னுள் உணர்வுகளை
உயிர்க்கிறாய்….
எதோ சொல்கிறாய்
எப்படியோ கொல்கிறாய்…
அப்படியேதான் இன்னும் நான்….

உன் காதல் பொருண்மை
மாறிப் போய் மறந்தும் போனதால்
பொருட்படுத்தா காகிதக் கிறுக்கலானது
என் காதல் உன் கைத் தூரிகையில்..
கலைபடா மௌனம் என் முகவரியாய்….
தேடல் துவங்காதே என்னில்..
நீ நான் இடைவெளி இன்னும்
நீளமாகிறது

ஏரூர் நிலாத்தோழி

Leave a Reply

%d bloggers like this: