ஆருயிர் தாய்க்கு சமர்ப்பணம்

அன்னையே!
என் தேசத்தின் ஒளியே!
நான் வாழ!
நான் வேரூன்ற
ஊக்கமளித்தவளே!
நன்றியுடன் நினைத்து பார்க்கின்றேன்
உன்னை…

ஈரேழு மாதங்கள்
என்னை தாங்கி
நடந்தவளே!
மார்பினிலே என்னை
வைத்து தாலாட்டியவளே!
உன் மடி மீது தவழ்ந்து
தான் செய்த இம்சைகளை பொருத்தவளே!
உந்தன் ஆசைகளை
எமக்காய் துறந்து
எந்தன் ஆசைகளை மட்டும் நிறைவேற்றியவளே!

எழுதவும், வாசிக்கவும்
கற்றுத் தந்து,
வாழ்க்கை பாடம் புகட்டி,
தம் திறன் காட்டி
என் திறனை வளர்த்து,
தவறை திருத்தி,
செம்மை படுத்தி,
மனிதம் என்னுள் புகுத்தி,
சமூகத்தில் தலைநிமிர்ந்து
சீராய் வாழ வழிகாட்டி,
கனவை உருவாக்கவும்
உருவாக்கிய கனவை நனவாக்கவும்,
பலகலைகளையும்
கற்றுத் தந்து
பல்கலைக்கழகமதில்
தடம் பதிக்க வைத்த
என் அறிவுப்
பெட்டகமே!

உந்தன்
அயராத முயற்சிக்கு
எத்தனை ஏழு
ஜென்மங்கள்
சென்றாலும்
ஈடாகுமா??
நான்
உனக்கு வைத்த
பாசமும்,
நன்றிக்கடனும்…

நான்
இன்று
இன்பம் காண…
அன்று
துன்பம் பொருத்தவளே…
இன்று தான்
உந்தன் கருவினிலே உருவானதையிட்டு
பெருமை அடைகின்றேன் – நான்.

தாயே!
நீ
திகட்டாத திரவியமாய்
முகம் சலிக்காமல்
என்னை வளர்த்து..
தான் பட்ட துன்பத்தை
தன் பிள்ளை படக்கூடாது
என்றெண்ணி
நீ ஒருத்தியாய்
இருந்து அத்தனை
துன்பத்தையும் பொருத்ததனாலேயே!
என்பது நிச்சயம்….

எனவே,
தூய பாலின்
நிறம் போல்
என்றும் கலங்கா
உள்ளம் கொண்டு..!
உன் அன்பு
மழையை மட்டும்
பொழிப(ந்த)வளே..!
மொத்தத்தில்
என்னை
தாலாட்டி..,
சீராட்டி..,
பாராட்டி…,
வளர்த்த
என் வாழ்வின்
அச்சாணியாய் விளங்கும்
உனக்கு
கோடானகோடி
பிரார்த்தனைகள்
என்றென்றும் உரித்தாகட்டும்…

Binth Abdhul Faleel
Third Year
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: