குளிக்கச் சென்று சேறு பூச வேண்டாம்!

  • 11

பல சிரமங்கள், தியாகங்களுக்கு மத்தியில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள், பயன்பெறும் அம்மக்களை (பயனாளிகளை) தரவுகளுக்காக புகைப்படம் பிடித்தாலும் அவற்றை முகநூலில் பதிவிடாமல் இருப்பதே பொருத்தமாகும்.

பசி, பட்டினி, சிரமங்கள், வறுமையை வெளியே காட்டாது ஏதோ தன்மானத்துடன் வாழ்ந்தவர்களது புகைப்படங்கள் முகநூலில் உலா வருவது அவர்களது மானம், கௌரவத்தை சீர்குழைக்கும் செயலாகும். அம்மக்கள் அனுமதித்திருந்தால் விடயம் வேறு, இல்லையேல் குளிக்கச் சென்று சேறு பூசிய கதையின் நிலை தான் ஏற்படும்.

ஸதகாவை பகிரங்கமாகவும் கொடுக்கலாம், மறைவாகவும் கொடுக்கலாம், எனினும் ரகசிய ஸதகா சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருந்தாலும் எண்ணங்களுக்கே அல்லாஹ் கூலி வழங்கக் காத்திருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்தி இக்லாஸுடன் செயற்பட எத்தனிப்பது அமல்கள் வேண்டி நிற்கும் முதல் விடயமாகும்.

வல்ல அல்லாஹ் அனைவரது நற்செயற்களைப் பொருந்திக் கொண்டு உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக!

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா

பல சிரமங்கள், தியாகங்களுக்கு மத்தியில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள், பயன்பெறும் அம்மக்களை (பயனாளிகளை) தரவுகளுக்காக புகைப்படம் பிடித்தாலும் அவற்றை முகநூலில் பதிவிடாமல் இருப்பதே பொருத்தமாகும். பசி, பட்டினி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *