நெற்றி முத்தம்

நெற்றி முத்தம்

நிலம் தொட்டு நுதல் பதித்து
நலம் வேண்டி பிரார்த்தித்தே
நித்தமும் சத்தமில்லாத முத்தம்
அதுவே உன் நெற்றி முத்தம்

கண்ணின் பனித்துளியென
மணி மணியாய் சிந்தும்
கண்ணீர்த்துளி கொண்டு
தரையினை நனைத்திடும் தருணம்
திரையின்றி நிலத்தினில்
பதிந்திடும் முத்தம்
அதுவே உன் நெற்றி முத்தம்

உளமதில் உதித்த துயரினை
உருக்கமாய் உதிர்த்திட
பிறை நுதல் பதித்து
இறையோனிடம் இறைஞ்சியே
முறையிட்டிடும் சமயம்
தரையுடன் உயிர்த்திடும்
உன்னத பந்தம்
அதுவே உன் நெற்றி முத்தம்

ILMA ANEES
(WELIGAMA)
SEUSL
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்