மௌலவிகளும் கவனிக்கப்பட வேண்டியவர்களே!

  • 13

நாட்டின் நிலவும் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக இலங்கையில் பல ஷரீஆ மத்ரஸாக்கள், பள்ளிகள், அல்குர்ஆன் மத்ரஸாக்கள், தஃவா பிரசாரங்களது தற்காலிக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதையடுத்து இவற்றில் பணிபுரிந்த மௌலவிகள் தமது வீடுகளில் வீற்றிருப்பதுடன் எவ்வித வருமானமும் இன்றி வெளியிலும் கேட்கவும் முடியாமல் சிரமத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

இவர்கள் பணிபுரிவதால் கிடைக்கும் சம்பளத்தில் ஏதோ குடும்பங்களது அன்றாட செலவுகளை சமாளித்துக் கொண்டிருந்த வேலையில் தற்போது எவ்வித வருமானமுமின்றி வீட்டிலுள்ளவர்களுக்கு நாளாந்த உணவுகளை வழங்க முடியாமல் இருக்கின்றவற்றை மிச்சம் பிடித்துப் பிடித்து தேவைகளை நிறைவு செய்வதானது ஏராளமானோருக்குத் தெரியாத விடயமாகும்.

இத்தருணத்தில் உலர் உணவு வழங்கும் திட்டத்தை செயற்படுத்தும் தனவந்தர்கள், வாலிபர்கள், சங்கங்கள், அமைப்புகள், பொறுப்பாளர்கள், ஊர் தலைமைகள் அனைவரும் மௌலவிமாரது குடும்பங்களின் விடயத்தில் அதீத கவனம் செலுத்துவதுடன் அவர்களுக்கும் இயன்ற உலர் உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களது பசி, பட்டினியைப் போக்கி ஏனையோர் போன்று நிம்மதியாக வாழ வழி செய்யுமாறு அன்பாக வேண்டுகிறேன்.

மார்க்கத்தைக் கற்று இயன்றளவு அதனை மக்களுக்கு பல வழிகளில் பரப்பும் மௌலவிகளை நாம் மறப்பது நன்றன்று ஏனெனில் அவர்களுக்கும் குடுப்பம், பொருளாதார தேவைகள், கஷ்டங்கள், உணர்வுகள் இருப்பதை எம்மில் அதிகமானோர் மறந்துவிடுகிறோம்.

ஆக இக்காலகட்டத்தில் அவர்களையும் முடியுமானவரை கவனித்து, உதவிகள் வழங்கி மகிழ்வான வாழ்வுக்கு வழிவகுப்போம்.

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா

நாட்டின் நிலவும் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக இலங்கையில் பல ஷரீஆ மத்ரஸாக்கள், பள்ளிகள், அல்குர்ஆன் மத்ரஸாக்கள், தஃவா பிரசாரங்களது தற்காலிக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதையடுத்து இவற்றில் பணிபுரிந்த மௌலவிகள் தமது வீடுகளில்…

நாட்டின் நிலவும் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக இலங்கையில் பல ஷரீஆ மத்ரஸாக்கள், பள்ளிகள், அல்குர்ஆன் மத்ரஸாக்கள், தஃவா பிரசாரங்களது தற்காலிக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதையடுத்து இவற்றில் பணிபுரிந்த மௌலவிகள் தமது வீடுகளில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *