இனிமேலாவது சிந்திக்குமா எம் சமூகம்

  • 9

அன்று நூஹ்(அலை), மூஸா (அலை), முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாமல் ஒரு கூட்டம் வழிதவறி நரகத்தை நோக்கி சென்றது.

இன்று அதே வரிசையில் ஒரு கூட்டம் தலைவருக்கும் தலைமைத்துவத்துக்கும் கட்டுப்படாமல் தானும் வழிக்கெட்டு ஒரு சமூகத்தையும் அதள பாதாளத்தில் தள்ள பார்க்கின்றது.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது எனக்கு கட்டுப்படுங்கள். எனது தூதருக்கு கட்டுப்படுங்கள். அடுத்து உங்களில் நின்றுமுள்ள தலைவருக்கும் தலைமைத்துவத்துக்கும் கட்டுப்படுங்கள் என கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறும்போது “உங்களுக்கு கறுப்பின அடிமைதான் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் கட்டுப்படுங்கள்” என கூறினார்கள்.

இஸ்லாம் எந்த அளவுக்கு அழகிய மார்க்கம் ஈருலகிற்கும் தேவையான அனைத்து விடயங்களையும் தெளிவாக எமக்கு கற்றுத்தந்துள்ளது.

தலைவருக்கும் தலைமைத்துவத்துக்கும் கட்டுபடுவதன் அவசியத்தை இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக வலியுறுத்தி இருக்க எமது சமூகத்தில் சிலர் ஏன் தலைக்கனம் பிடித்து உலா வருகின்றார்கள்? இவர்களின் இச் செயலால் பாதிக்கப்படுவது யார் ?

ஊரடங்கு சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட பின்னர் நம்மவர்கள் செய்தது என்ன ?

ஹொரவாபெத்தானையில் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டவர்கள் 17 பேர் கைது

காத்தான்குடியில் பூட்டி இருந்த வாவிக்கரை பள்ளி விராந்தையில் தொழுகையில் ஈடுபட்ட சிலர் கைது

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வந்த லொரியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளரின் செயற்பாட்டால் முழு கிராமத்திற்கும் பூட்டு மாவட்டத்தில் பதற்றம்

ராகம வைத்தியசாலையில் நெஞ்சு வலி என அடுமதிக்கப்பட்டவர் கொரோனா தொற்றுக்குள்ளான போது அவருடைய மகன் வெளிநாட்டிலிருந்து வந்ததை மறைத்தமையால் வைத்தியசாலையின் அவ் விடுதியில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட சம்பவம்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பேருவளையில் ஒரு கூட்டம் மஸ்ஜிதுக்குச் செல்லும் சம்பவம்

ஊரடங்கு சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டவர்களில் முஸ்லிம்கள் 65 சதவீதம்

இவை அனைத்தையும் செய்தது யார் ??? எம்மில் சிலர் தான் மாற்று மதத்தினர் அமைதியாக இருக்கும் போது ஏன் உங்களுக்கு மட்டும் இந்த ஈன புத்தி? சென்ற வருடம் ஏப்ரல் 21 இல் வாங்கியது இன்னும் ஆராவடுவாகவே உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒன்று தேவை தானா நமக்கு?

ஒரு சிலர் செய்யும் இந்த அநாவசிய செயல்களினால் முழு முஸ்லிம் சமூகமும் தலை குனிய வேண்டிய நிலை மட்டும் அல்ல வாங்கி கட்டும் நிலைக் கூட வரும் கடந்த காலங்களில் வந்தும் உள்ளது. திகன கலவரம் எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது சோதனைகள் வருவது எல்லாம் நாம் எமது கரங்களினால் செய்ததின் விளைவுகளே எனக் கூறுகின்றார்.

எங்களுக்கு சோதனைகள் வருவது நாங்கள் செய்யும் செயற்பாடுகளின் விளைவே ஆகும் அது தான் உண்மையும் கூட.

இனிமேலாவது இலங்கை அரசாங்கத்திற்கும் எமது தலைமைத்துவத்தின்கும் கட்டுப்பாட்டு சிறந்த ஒரு சமூகமாக மாற முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடின் கொரோனாவிற்கு தாய் முஸ்லிம்களாக ஆகி விடுவோம்.

இலங்கை அரசே தவறுகள் செய்வது யாராயினும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கி விடு இவர்கள் தாமாகவே முன்வந்து திருந்துபவர்கள் அல்ல சட்டத்தின் மூலம் இவர்களை நீ திறுத்து அப்போது தான் நம் நாடும் நம் மக்களும் சிறப்பாக வாழ முடியும்.

Nafees Naleer (Irfani),
BA.(R)(Seusl),
Diploma in counseling (R),
Editor of veyooham media center.

அன்று நூஹ்(அலை), மூஸா (அலை), முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாமல் ஒரு கூட்டம் வழிதவறி நரகத்தை நோக்கி சென்றது. இன்று அதே வரிசையில் ஒரு கூட்டம் தலைவருக்கும் தலைமைத்துவத்துக்கும் கட்டுப்படாமல் தானும் வழிக்கெட்டு ஒரு…

அன்று நூஹ்(அலை), மூஸா (அலை), முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாமல் ஒரு கூட்டம் வழிதவறி நரகத்தை நோக்கி சென்றது. இன்று அதே வரிசையில் ஒரு கூட்டம் தலைவருக்கும் தலைமைத்துவத்துக்கும் கட்டுப்படாமல் தானும் வழிக்கெட்டு ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *