இஸ்லாமிய உம்மத் மறந்து விட்ட கட்டுப்பாடு

  • 24

இஸ்லாத்தின் அடிப்படையே கட்டுப்படுதல் என்பதாகும். எனினும் துரதிர்ஷ்டவசமாக எம் சமூகம் இத்தகைய கட்டுப்பாடு எனும் உயரிய பண்பை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அணுவனுவாய் ஒவ்வோர் விடயத்திலும் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவதை கடமையாக்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. எந்த அளவிற்கென்றால் உங்களில் இருவர் இருந்தால் உங்களில் சிறியவர் தொழுகைக்காக இகாமத் சொல்லட்டும், உங்களில் பெரியவர் தொழுகை நடாத்தட்டும் எனப் பணித்தது இஸ்லாம். இமாமுக்குப் பின்னால் நின்று தினமும் ஐவேளை தொழும் எம் சமூகத்திடமே தலைமைத்துவத்தை மதித்து அதற்குக் கட்டுப்படுவதை காணமுடியாதிருப்பது வேதனைக்குரிய விடயமே.

இறைவன் தன் திருமரையில் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவதன் முக்கியத்துவத்தை இவ்வாறு கூறுகிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (4:59)

இறைவனுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டதன் பின் எமக்கு நியமிக்கப்பட்ட தலைவருக்கு கட்டுப்படுவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. அந்தவகையில் மார்க்கத்திற்கு முரணாக எந்த ஒரு விடயத்தில் அல்லாமல் மற்ற அனைத்து விடயங்களிலும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது தான் எம் தலையாய கடமையும் இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஃமினின் பண்பும் ஆகும்.

எனவே கட்டுப்படுவதன் மூலம் கட்டுப்பாடான ஒரு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முயல்வோம்.

AAQILA NAWAS
(Usaimeeniyya)
SEUSL

இஸ்லாத்தின் அடிப்படையே கட்டுப்படுதல் என்பதாகும். எனினும் துரதிர்ஷ்டவசமாக எம் சமூகம் இத்தகைய கட்டுப்பாடு எனும் உயரிய பண்பை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அணுவனுவாய் ஒவ்வோர் விடயத்திலும் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவதை கடமையாக்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால்…

இஸ்லாத்தின் அடிப்படையே கட்டுப்படுதல் என்பதாகும். எனினும் துரதிர்ஷ்டவசமாக எம் சமூகம் இத்தகைய கட்டுப்பாடு எனும் உயரிய பண்பை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அணுவனுவாய் ஒவ்வோர் விடயத்திலும் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவதை கடமையாக்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *