தொலைவின் தேடல்கள்

வாழ்வின் சில நிமிடங்கள்
கனவாகிவிடாதா என்ற அற்ப
எதிர்பார்ப்பு நிஜமாய்த் தெரியும்
நினைப்பது எதுவும் நடந்தது விடாது என்று

கடந்த நாட்களின் சில தருணங்கள்
மிகத் தெளிவாய் உணர்த்தி விட்டன
இவ்வளவு தான் வாழ்க்கை
இதற்காக தான் அனுப்பப்பட்டாய் என்று.

கடந்து வந்த பாதையை நின்று
நிதானமாய் திரும்பிப் பார்க்கையில்
எங்கோ ஓர் தொலைவில்
ஏதோ ஓர் முடிவில் – அது
முடிவா தொடக்கமா என்று
கூட தெரியவில்லை- அங்கு
சிறு கீற்றாய் பல வினாக்கள்
தேடல்கள்…

தொலைவின் தேடல்கள் எல்லாம்
அருகில் இருந்த போது
உணரப்படாமல்  தொலைக்கப்பட்டவை தானே!

Jaazira Junaideen
University of Colombo
Faculty of Technology

வாழ்வின் சில நிமிடங்கள் கனவாகிவிடாதா என்ற அற்ப எதிர்பார்ப்பு நிஜமாய்த் தெரியும் நினைப்பது எதுவும் நடந்தது விடாது என்று கடந்த நாட்களின் சில தருணங்கள் மிகத் தெளிவாய் உணர்த்தி விட்டன இவ்வளவு தான் வாழ்க்கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *