செல்வந்தராக மாறுவதன் முதல் படிமுறை

  • 265

முயற்சி செய்து பாருங்கள்

“செல்வம் என்பது அதிகப் பொருட்களை வைத்திருப்பதல்ல, மாற்றமாக செல்வம் என்பது நிறைவான உள்ளமாகும்” (புகாரி , முஸ்லிம்)

நான் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியின் போது , அதில் கலந்துகொண்டோரிடம் ஒரு வினாவை எழுப்பினேன்.

“நீங்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு அவசியமானவை எவை? அத்தோடு; உங்கள் குடும்பம் , சமூகம், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வியாபாரப் பங்காளிகள் அனைவரையும் திருப்திப்படுத்த உங்களிடம் இருக்க வேண்டிய செல்வங்கள் எவை?”
நீங்களும் பதில் கூறிப் பார்க்கலாம்!
பட்டியல் தொடர்ந்தது.

  • மனைவியைத் திருப்திப்படுத்த பல பவுன் நகைகள்!
  • பிள்ளைகளைத் திருப்திப்படுத்த ஒரு பெரிய வீடு!
  • சமூகத்தைத் திருப்திப்படுத்த ஒரு அந்தஸ்துள்ள உத்தியோகம்!
  • உறவினரைத் திருப்திப்படுத்த பல கோடி ரூபாய் மீதியுள்ள வங்கிக் கணக்குகள்!
  • நண்பர்களைத் திருப்திப்படுத்த சொந்தமான வாகனம்!

இவை இருந்தால் போதுமா?

“இல்லை! இல்லை!
இன்னும் ஒன்று!!!”

இப்பட்டியல் இலகுவில் முடியாது.

இப்பட்டியலை இடைநிறுத்தி விட்டு ஒரு காணொளியைக் காட்சிப்படுத்தினேன். அது ஒரு அழகிய கருத்தைக் கூறும் காணொளி!

ஒரு சிறுவன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியே ஒருவர் சைக்கிளில் செல்கிறார். சிறுவன் அவரைப் பார்த்துவிட்டு ‘எனக்கு ஒரு சைக்கிள் இருக்கக் கூடாதா?’ எனக் கனவு காண்கிறான்.

அடுத்து, சைக்கிளில் செல்பவர் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்பவரைப் பார்க்கிறார். அப்போது அவர் ‘எனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கக் கூடாதா?’ என்று சிந்திக்கிறார்.

மோட்டார் சைக்கிளுடன் செல்பவர் ஒரு காரை பார்த்து விட்டு கனவு காண்கிறார்.

காரில் செல்பவர் ஒரு விமானத்தை அண்ணாந்து பார்ப்பதுடன் காணொளி முடிவுறுகிறது.

இந்தக் காணொளியை காண்பித்து முடித்தவுடன் முன்வரிசையிலிருந்த ஒருவர்,

“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் , ‘தனக்கு இன்னுமொரு நீரோடை இருந்திருக்க வேண்டுமே’ என்று ஆசைப்படுவான்” என்ற நபி மொழியை புன்முறுவலுடன் நினைவுபடுத்தினார்.

நாமும் சில சமயம் செல்வந்தம் என்பதை, தேவைக்கு அதிகமாக கைநிறைய பணமும் ஒன்றிற்கு இரண்டு வாகனங்கள் வாங்கும் ஆடம்பரத்தையுமே கற்பனை செய்கிறோம். அதை அடைவதற்கே பெரும்பாலான சமயங்களில் இன்றைய நிம்மதியையும் தொலைக்கிறோம். இறுதிவரை அந்த நிம்மதி கிடைக்காமலேயே பலர் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் செல்வந்தம் என்பதை “நிறைவான உள்ளம்” என்கிறது.

உன் கையில் பணம் நிறையாவிடினும், மனம் நிறைந்திருந்தால் அவனே செல்வந்தன் என்கிறது மேற்குறிப்பிட்ட நபிமொழி.

உன்னிடம் கோடிகள் இல்லாவிடினும், அது வேண்டும் இது வேண்டும் எனப் பட்டியலிடும் உள்ளம் இல்லாவிடின் நீதான் கோடீஸ்வரன்!

வயிற்றுப் பசியுடன் இருந்தும் உன்னிடம் இருப்பவற்றைத் திருப்தியுடன் ஏற்கும் மனப்பாங்கு இருந்தால் நீதான் லட்சாதிபதி!

உன்னிடம் கோடிகள் இருந்தும் லட்சங்கள் இருந்தோம் உனது உள்ளம் திருப்தியடையாவிடின், நீயே ஏழை!

நீயே வறுமைக் கோட்டின் கீழ் வசிப்பவன்!

நீயே பட்டினியில் சாகுபவன்!

அந்நிகழ்வின் இறுதியில் நபிகளார் பற்றிய சில செய்திகள் எம்மத்தியில் நினைவுக்கு வந்தது!!

சில நாட்கள் வீட்டில் அடுப்பு எரிக்க வசதியில்லாத நபிகளார், காற்றை விட வேகமாக தர்மம் செய்துள்ளார்கள். நாம் பட்டியலிட்ட எதுவும் நபிகளாரிடம் இருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் , தனது குடும்பத்தையும் தோழர்களையும் சமூகத்தையும் திருப்திபடுத்தவில்லையா? அவரிடம் பணம் இருக்கவில்லை! நிறைவான மனம் இருந்தது! செல்வந்தராக வாழ்ந்து சென்றார்கள்.

பயிற்றுவித்தலின் போது பொருளாதார மேம்பாட்டினைத் திட்டமிடுவது அவசியம்! ஆனால் நிறைந்த மனதுடன் பொருளாதாரம் திட்டமிடப்படாத சமயத்தில் எப்போதுமே செல்வந்தர்கள் உருவாக மாட்டார்கள்.

Fazlan A Cader (B.A)R
Psychological counsellor

முயற்சி செய்து பாருங்கள் “செல்வம் என்பது அதிகப் பொருட்களை வைத்திருப்பதல்ல, மாற்றமாக செல்வம் என்பது நிறைவான உள்ளமாகும்” (புகாரி , முஸ்லிம்) நான் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியின் போது , அதில் கலந்துகொண்டோரிடம் ஒரு…

முயற்சி செய்து பாருங்கள் “செல்வம் என்பது அதிகப் பொருட்களை வைத்திருப்பதல்ல, மாற்றமாக செல்வம் என்பது நிறைவான உள்ளமாகும்” (புகாரி , முஸ்லிம்) நான் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியின் போது , அதில் கலந்துகொண்டோரிடம் ஒரு…

18 thoughts on “செல்வந்தராக மாறுவதன் முதல் படிமுறை

  1. Hey! This post couldn’t be written any better! Reading this post reminds me of my good old room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thanks for sharing!

  2. My spouse and I stumbled over here from a different website and thought I may as well check things out. I like what I see so now i’m following you. Look forward to looking at your web page yet again.

  3. Hey there, I think your blog might be having browser compatibility issues. When I look at your blog site in Firefox, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, amazing blog!

  4. Terrific post however , I was wondering if you could write a litte more on this topic? I’d be very grateful if you could elaborate a little bit more. Thank you!

  5. It’s really a nice and helpful piece of information. I’m glad that you shared this helpful info with us. Please stay us informed like this. Thank you for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *