பார்வை பார்த்து விடு

சிவப்பழகியின்
சிவந்த கண்ணங்களுக்குள்
சிக்கிக் கொண்டேன்
சிதறாத சிந்தனைகளில்
சிறகடித்துப் பறந்தேன்.

பல்லாங்குழி ஆடுகையில்
பால்நிறத்தாளின்
கண்ணக்குழி-என்
நெஞ்சுக்குழியை
நெருக்கி விடுகிறது.

கடந்து போகையில்
கடத்தி செல்லும்
கன்னி அவளின்
காதல்
கண்ணிரண்டில்
மையமிடுகிறது
மெதுவாக.

மென்று திண்பதற்காக
படைத்தானோ!
பிரம்மன் அவள் இதழை
பிணமாய் போகிறேன்
பெண்ணவளின்
பின்னழகின் சாயளில்.

மீட்டெடுக்க வருவாளே!
மீள்
பார்வை
பார்ப்பாளே!
முறுக்கிய மீசைக் காரன்
முடங்கிப் போவதற்கு.

பாத்திமா அப்றின்.
அட்டாளைச்சேனை-09

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: