பாவங்கள்

 ﻗﺎل الإمام اﺑﻦ اﻟﻘﻴﻢ -رﺣﻤﻪ اﻟﻠﻪ-:

وﻣﻦ ﺗﺄﺛﻴـﺮ اﻟﻤﻌﺎﺻﻲ ﻓﻲ اﻷرض ﻣﺎ ﻳﺤﻞ ﺑﻬﺎ ﻣﻦ اﻟﺨﺴــﻒ واﻟﺰﻻزل، وﻳﻤﺤــﻖ ﺑﺮﻛﺘﻬـﺎ، وﻛﺜﻴــﺮ ﻣﻦ ﻫــﺬه اﻵﻓﺎت أﺣﺪﺛﻬﺎ اﻟﻠﻪ ﺳﺒﺤﺎﻧﻪ وﺗﻌﺎﻟﻰ ﺑﻤﺎ أﺣــﺪث اﻟﻌـﺒﺎد ﻣﻦ اﻟﺬﻧـﻮب .

( اﻟــﺪاء واﻟــﺪواء ١٦٠)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பூமிக்குள் சுழி வாங்குதல், பூமியதிர்ச்சி போன்றன இறங்கி, மறைவான அருளை அழித்து விடக்கூடியவை எல்லாம் பூமியில் பாவங்கள் தாக்கம் செலுத்தியதன் காரணமாகும், அடியார்கள் உருவாக்கிய பாவங்கள் காரணமாக இந்த ஆபத்துக்களில் அதிகமானவற்றை அல்லாஹ் உண்டாக்கியுள்ளான்.

(நூல்: அத்தாவு வத்தவாவு, பக்கம்: 160)

قال الإمام ابن القيم -رحمه الله-:

الطاعة تجلب للعبد بركات كل شيء، والمعصية تمحق منه كل بركة.

( طريق الهجرتين ٢٧٤/١)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (அல்லாஹ்வுக்கு) வழிப்படல் அனைத்து விடயத்தின் மறைமுகமான அருள்களை ஒரு அடியானிடம் கொண்டு சேர்க்கும், (அல்லாஹ்வுக்கு) மாறு செய்வது (பாவம் செய்வது) மறைமுக அருள் அனைத்தையும் அந்த (விடயத்தில்) இருந்து அழித்து விடும். (நூல்: தரீகுல் ஹிஜ்ரதைன், பாகம்: 01, பக்கம்: 274)

 ‏قال الإمام ابن الجوزي رحمه الله :

‏المعاصي سلسلة في عنق العاصي،

لا يفكه منها إلا الإستغفار والتوبة .

(‏ التذكرة في الوعظ ٩٦)

இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவங்கள் பாவியின் கழுத்தில் உள்ள சங்கிலியை போல, பாவமன்னிப்பும் பாவமீள்ச்சியும் தான் அதிலிருந்து அவிழ்த்து விட (கலட்டி விட) முடியும். (நூல்: அத் தzத்கிரது ஃபில் வஃள், பக்கம்: 96)

 

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: