பிரிவு

உன்னில் உள்ள ஏதோ
ஒன்று என்னை ஈர்க்கின்றது
நான் உன்னை விட்டு
விளகியிருக்கும் போதும்
என் மனம் உன்னையே நினைக்கிறது

நீ என்னுடன் இருந்த
போதெல்லாம் இல்லாத பாசம்
இன்று உன்னை விட்டு
விலகியிருக்கும் போது தான் வருகிறது.

கண்களோடு கண்ட கனவுகள்
எல்லாம் நனவுகளாகா விட்டாலும்.
நினைவுகளிலாவது உன்னுடன் வாழ
என்னுயிர் அழைகிறது.

காதல் என்ற மூன்று எழுத்துக்களுக்கு
நீ பிரிவு என்ற மூன்று எழுத்துக்களை
அறிமுகப்படுத்தினாய்
என்ற போதிலும்
உன் இணைவையே
என் மனம் இன்னும் விரும்புகிறது
உன்னில் என்னை ஈர்க்கின்றது
எது என்றால் – அது
என்னைப் பிரியும் வரை
நீ செய்த காதல் தான்

H.F Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: