“தர்மம்” தற்கொலை

அழுத்கமயில் நீதிக்கு தூக்கு என்று கேள்விப்பட்டவுடன் திகனயில் தர்மம் தற்கொலை செய்து கொண்டது. இனி அழுதால் என்ன தொழுதால் என்ன

எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். 21ல் வெடித்ததும் இந்த கதை தான். கொரோனாவில் வெடிக்கப் அதே கதைதான். அதிகார வெறி இப்படியே போனால் மனிதன் தாங்க மாட்டான் என்றே இறைவன் கொரோனா படையை அனுப்பி வைத்தான். 2020ன் அடங்காப்பிடாரிகளை அது பதம் பார்க்கிறது. கூரை எரியும் போது சில விஷமிகள் சுருட்டு பற்ற வைக்கிறார்கள். ஆணவம் இன்னும் அடங்கவில்லை. இறை சோதனைகள் கழுத்தை பணிய வைக்கும் என்பதற்கு வரலாறு சாட்சி. அதில் எமக்கு அசையாத நம்பிக்கை உண்டு.

அன்பர்களே! நீதி தூக்கு மேடை ஏறுவது போல தெரியும். ஆனால் இறுதிச் சுற்றில் வெற்றி பெறுவது நீதி ஒன்றே. தர்மம் சாவதில்லை. இதுதான் மனித வரலாறு கூறும் பாடம். ஒரு சான் வயிற்றுக்கு வழியில்லையென்றால் ஒரு முழம் கயிறை நாடுவது மனித ஜாதி அல்ல.

உலக வாழ்க்கை ஒரு சோதனைக் களம். வயிற்றை வைத்து படைத்த இறைவன் அறிவையும், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் தந்தே மனிதனை படைத்துள்ளான். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் மனிதன் மயங்கும் போது நிச்சயமாக அவன் வழியும் காட்டுவான்.

மனிதனை முள்ளந்தண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றிய இறைவன் அனைத்து வகையான இடுக்கண்களில் இருந்தும் வெளியேற்ற போதுமானவன்.

நடந்து முடிந்தவை யாவும் இறை நாட்டத்தோடு நடந்தே. இறை நாட்டத்தோடு நடந்த எதிலும் தீமை கிடையாது. நன்மை தான் உண்டு. எனவே நம்பிக்கை தளராமல் இறைவனிடம் இறைஞ்சுவோம். பொறுமையைக் கடைப்பிடிப்போம். திக்ர், பாவமன்னிப்பு தேடல், மன்றாடுதல் எமது பொழுது போக்காக ஆகவேண்டும். அழுது தொழுது கெஞ்சி கேட்கும் போதுதான் மூடியிருக்கும் பாரங்கள் கொஞ்சம் விலகும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: